துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்: முக்கியமான தேர்தல்

பிடோக் சவுத் சந்தை, உணவங் காடி நிலையத்தில் நேற்று வாக்கு சேகரித்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடம் மாற்றங்களுக்குத் தயாராக இருப்பதாக மக்கள் கூறினர்.

“இது மிக முக்கியமான தேர்தல். சிங்கப்பூரர்களின் வாழ்க்கை, வேலைகள், எதிர்காலம் பற்றியது. இத்தகவல் ஒவ்வொருவரிடமும் மீண்டும் வலுவாக வலியுறுத்தப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி,” என்று செய்தியாளர்களிடம் கூறினார். “கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள மோசமான நெருக்கடியை சமாளித்து, வலிமையுடன் மீண்டு வர வேண்டும், ஒரே மக்களாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.