மீண்டும் ராடின் மாசில் போட்டியிடும் குமார் அப்பாவு

தொகுதி அரசியல் ஒளிபரப்பில் நேற்று முன்தினம் கலந்து கொள்ளமுடியாத தேர்தல் வேட்பாளர் திரு குமார் அப்பாவு தாம் பிரதிநிதிக்கும் சீர்திருத்தக் கட்சி (சீக) அதற்கான ஒளிப்பதிவு அட்டவணை நேரத்தை தமக்கு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தமது ஃபேஸ்புக் இணையத் தளத்தில் நேற்று பதிவிட்ட காணொளியில் திரு குமார் அப்பாவு அவ்வாறு தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியின் வேட்பாளராக ராடின் மாஸ் தனித்தொகுதியில் போட்டியிட்டார் திரு குமார் அப்பாவு.

மூன்று வேட்பாளர்கள் அத்தொகுதியில் போட்டியிட, சுமார் 77% வாக்குகளுடன் அத்தொகுதியை கைப்பற்றினார் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர் திரு சேம் டான். மறுமுறை இத்தொகுதியில் போட்டியிட 52 வயது குமார் அப்பாவு களமிறங்கியுள்ளார்.

எண்ணெய், எரிவாயுத் துறையில் சொந்தத் தொழில் நடத்தும் இவர், 1960களில் மறைந்த தம் தந்தை அமரர் பக்கிரி அப்பாவுவின் அரசியல் ஈடுபாடு தம்மையும் மக்களுக்குப் பங்களிக்க முன்வர தூண்டியதாகச் சொன்னார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் கடைசி நிமிடத்தில் தமது கட்சியினர் ராடின் மாஸ் தொகுதிக்குப் போட்டியிட அனுப்பியதால் அவரால் குறுகிய காலத்திற்குள் போட்டிக்குத் தயார்படுத்திக்கொள்ள இயலவில்லை என்று கூறிய குமார் அப்பாவு, கடந்த ஓராண்டு காலமாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் அக்கறைகளைச் செவிமடுத்து வருவதாகக் கூறினார்.

அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களிடம் பேசியதில், கொவிட்-19 கிருமித்தொற்று சமயத்தில் வேலை நிலைத்தன்மைதான் பெரும்பாலான குடியிருப்பாளர்களின் அக்கறையாக இருந்தது என்றும் வாழ்க்கை செலவினத்தைச் சமாளிக்க, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளில் கூடுதல் உதவியை அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் திரு குமார் விளக்கினார்.

“நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மூப்படையும் சமுதாயத்திற்கு போதிய வேலை வாய்ப்புகள் இருப்பது குறித்தும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் கட்டுப்படியான விலையில் இருப்பதை உறுதி செய்யவும் நான் குரல் கொடுப்பேன்,” என்று தெரிவித்தார் திரு குமார்.

அதோடு, முழு நேர நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்ற அவர் தயாராக இருக்கிறாராம்.

இந்தத் தேர்தலில் அவர் ராடின் மாஸ் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் மெல்வின் யோங்கை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

கடந்த சில நாட்களாக ராடின் மாசில் தொகுதி உலா மேற்கொண்டு அங்குள்ள குடியிருப்பாளர்களை சந்தித்தார் திரு குமார் அப்பாவு.

ராடின் மாஸ் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் மெல்வின் யோங்கை எதிர்த்துப் போட்டியிடும் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் திரு குமார் அப்பாவு.படம்: சாவ்பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!