‘மசெகவின் செயல்பாட்டை அணுக்கமாகக் கண்காணிப்போம்’

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வாக்காளர்களுக்கு உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் செயல் கட்சியின் செயல்பாட்டை அணுக்கமாகக் கண்காணிக்கப்போவதாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வாக்காளர்களுக்கு உறுதி அளித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தெம்பனிஸ் குழுத்தொகுதியிலும் செம்பவாங் குழுத்தொகுதியிலும் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.

கொவிட்-19 சூழ்நிலையிலும் பல சவால்களை முறியடித்து தனது திட்டங்கள், நிலைப்பாடுகள் அனைத்தையும் வாக்காளர்களின் முன்வைத்திருப்பதாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.