ஹவ்காங் மீண்டும் பாட்டாளிக் கட்சியிடமே

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனித்தொகுதிகளில் ஒன்றான ஹவ்காங்கில் மீண்டும் பாட்டாளிக் கட்சியே கொடி நாட்டியுள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக தேர்தல் களம் பெருமளவு மாறியிருந்தாலும் வாக்காளர்கள் மனம் மாறவில்லை என்பதை இத்தொகுதியின் தேர்தல் முடிவு காட்டுகிறது.

இந்தத் தேர்தலில் எப்படியும் இந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டு விடலாம் என்று பாட்டாளிக் கட்சி கொண்டிருந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

மசெகவின் 50 வயது லி ஹோங் சுவாங்கை தோற்கடித்து பாட்டாளிக் கட்சியின் 49 வயது டெனிஸ் டான் 15,416 (61.19%) வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
திரு லி ஹோங் பெற்ற வாக்குகள் 9,776 (38.81%).

டெனிஸ் டான் 2015 தேர்தலில் ஃபெங்ஷான் தனித்தொகுதியில் போட்டியிட்டு 42.5% வாக்குகளுடன் மசெகவின் ஷெரல் சானிடம் தோல்வி அடைந்தார்.
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற அவர் பாட்டாளிக் கட்சியின் தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது முழு உறுப்பினராக அவர் தேர்வு பெற்றுள்ளார்.

ஹவ்காங் தனித் தொகுதி 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மூன்றாண்டுகள் மக்கள் செயல் கட்சி வசம் இருந்த இந்தத் தொகுதியை 1991ல் நடந்த தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் லோ தியா கியாங் கைப்பற்றினார்.

கடந்த 2011ல் அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கு செல்லும் வரையில் அவர் அத்தொகுதியிலேயே இருந்தார்.

இத்தொகுதியில் சில மாற்றங்களே ஏற்பட்டுள்ளன. உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இத்தொகுதியில் தேர்தல் எல்லை பெரும்பாலும் அப்படியே உள்ளது.

இத்தொகுதியில் மொத்தம் 26,468 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

மொத்தம் 25,464 பேர் வாக்களித்தனர். இதில் தகுதி பெற்ற வாக்குகள் 25,192. தகுதியிழந்த வாக்குகள் 272.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!