புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி: மசெக முரளி பிள்ளை வெற்றி

புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் முரளி பிள்ளை, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவானை தோற்கடித்தார்.

முதலில் 100 வாக்குகளை எண்ணியபோது திரு முரளி பிள்ளை 57 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு 43 வாக்குகள் கிடைத்திருந்தன.

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இதே நிலையே தொடர்ந்தது.

சென்ற 2016ல் இந்தத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இவர்கள் இருவரும் போட்டியிட்டனர்.

திரு முரளி பிள்ளை அப்போது 61.2% வாக்குகள் பெற்று வென்றார்.

இப்போது திரு முரளி பிள்ளை இத்தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளும் நிலைமை இருந்து. இறுதிவரை இதே நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

இந்தத் தொகுதியின் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டேவிட் ஓங் கிம் ஹூவாட் பதவி விலகியதை அடுத்து 2016ல் இடைத்தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிஜகவின் டாக்டர் சீ செய்தியாளர்களிடம் பேசியபோது, கட்சிக்குக் கிடைத்துள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

கொள்கைகள் தொடர்பில் தம் கட்சி சிறப்பானதோர் பிரசாரம் செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிஜக தொடர்ந்து தம் திட்டங்களை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!