பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்த தலைவர்கள்

(மேல் படம்) அதிபர் ஹலிமா யாக்கோப் தம் கணவர் அப்துல்லா அல்ஹப்ஷியுடன் வாக்களிப்பதற்காக நேற்று சுங் செங் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தார். மூத்த குடிமக்களுக்கென சிறப்பாக ஒதுக்கப்பட்ட நேரத்தின்போது இருவரும் வாக்களிக்கச் சென்றிருந்தார்கள். சென்ற பொதுத் தேர்தலில் திருவாட்டி ஹலிமா மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதியில் மசெக அணி வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கையுறை அணிந்தவாறு நேற்று

பிரதமர் லீ சியன் லூங் அலெக்சாண்ட்ரா தொடக்கப்பள்ளியில் தம் வாக்கைச் செலுத்தினார். இப்பொதுத் தேர்தலுக்கு திரு லீ, தம் ஐந்து உறுப்பினர் மசெக அணியுடன் அங் மோ கியோ குழுத் தொகுதியில் சீர்திருத்தக் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஏஎஃப்பி