பொத்தோங் பாசிரை மீண்டும் கைப்பற்றிய சீத்தோ

பொத்தோங் பாசிர் தனித் தொகுதிக்கான தேர்தலில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான 56 வயது திரு சீத்தோ யி பின் 11,232 (60.6%) வாக்குகளைப் பெற்று 3ஆம் தவணையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் மக்கள் கட்சியின் ஹோேச ரேமண்ட் 7,275 (39.31%) வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

2015 பொதுத் தேர்தலில் திரு சீத்தோ தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் மக்கள்

கட்சியின் ேவட்பாளர் திருவாட்டி லீனா சியாமை தோற்கடித்து 66.39 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.