மெக்பர்சன் தனித் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான டின் பெய் லிங் 18,983 (71.74%) வாக்குகள் பெற்று தமது தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளரான 49 வயது திரு கோ மெங் சிங் 7,477 (28.26%) வாக்குளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
2015 பொதுத் தேர்தலில் டின் பெய் லிங் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சியின் பெர்னார்ட் சென்னையும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் சியோ சாய் சென்னையும் தோற்கடித்து 65.6 விழுக்காடு வாக்குளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.