பைனியரில் மசெக வெற்றி

பைனியர் தனித் தொகுதியில் நடைபெற்ற மும்முனைப் போட்டியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளரான 48 வயது திரு பேட்ரிக் டே 14,571 (61.98%) வாக்குகள் பெற்று அத்தொகுதியைக் கைப்பற்றினார்.

திரு டே கடந்த பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளரான 42 வயது லிம் செர் ஹோங் 8,285 (35.24%) வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளரான சியாங் பெங் வா 654 (2.78%) வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர்.

 

 பைனியர் தனித்தொகுதி 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் இருந்து தனித்தொகுதியாகப் பிரித்து எடுக்கப்பட்டது.

 இந்த ஆண்டு பொதுத்தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை வரையறை அறிக்கையில் பைனியர் தனித்தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

 பொதுத் தேர்தல் 2015ல் மக்கள் செயல் கட்சியின் செட்ரிக் ஃபூ 76.34 விழுக்காடு வாக்குகள் பெற்று தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் எல்வின் ஓங்கை வெற்றி கண்டார்.