மேரிமவுண்ட் தனித்தொகுதியைக் கைப்பற்றியது மசெக

பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புதிய மேரிமவுண்ட் தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய 45 வயது திருவாட்டி கான் சியாவ் ஹுவாங் 12,143 (55.04%) வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளரான 65 வயது டாக்டர் ஆங் யோங் குவான் 9,918 (44,96%) வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார்.