எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்போம்: இங்

புதிய குழுத்தொகுதியான செங்காங்கில் மக்கள் செயல் கட்சி அணி தோல்வியைத் தழுவியது இந்தத் தேர்தலின் பேரதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

என்டியுசி தலைமைச் செயலாளர் திரு இங் சீ மெங், டாக்டர் லாம் பின் மின், திரு அம்ரின் அமின், திரு ரேமண்ட் லாய் ஆகியோர் அடங்கிய மசெக அணி 47.87% வாக்குகளை மட்டும் பெற்று, பாட்டாளிக் கட்சியிடம் தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து, செங்காங்கில் வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக இன்று பாராட்டு தெரிவித்துக்கொண்டார் திரு இங்.

அடுத்த ஐந்தாண்டுகளில் செங்காங் குழுத்தொகுதிவாசிகளுக்கு பாட்டாளிக் கட்சிக் குழுவினர் திறம்பட சேவையாற்றுவர் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய தேர்தலில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் களமிறங்கிய திரு இங், இம்முறை செங்காங் குழுத்தொகுதியில் போட்டியிட்ட மசெக அணிக்குத் தலைமையேற்றார்.

“கடந்த சில வாரங்களில் செங்காங்கில் தொகுதி உலா சென்று, பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தது அற்புதமாக இருந்தது. அவர்களின் மலர்ந்த முகங்களும் வணக்கங்களும், குறிப்பாக குழந்தைகளுடனான சந்திப்பு உண்மையிலேயே நெஞ்சைத் தொடுவதாக இருந்தது,” என்றார் திரு இங்.

“அடுத்து வரும் நாட்களில், எதிர்காலத்திற்கான திட்டம் வகுக்க நேரம் செலவிடுவோம்,” என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, கடந்த 14 ஆண்டுகளாக செங்காங் வெஸ்ட்டில் சேவையாற்ற முடிந்தது தமக்குக் கிடைத்த சிறப்புரிமை, கௌரவம் என்று திரு லாம் பின் மின் கூறியுள்ளார்.

செங்காங் வெஸ்ட் பகுதியைத் தம் குழந்தையாகக் குறிப்பிட்ட டாக்டர் லாம், “என் ‘குழந்தை’ வளர்ந்து, உருமாறி, இன்று எட்டி இருக்கும் நிலையைப் பார்க்க முடிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது,” என்றார்.

அனைவருக்கும், குறிப்பாக மறக்க முடியாத நினைவுகளை அளித்த செங்காங் வெஸ்ட் குடியிருப்பாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இந்தத் தேர்தலில் மசெகவின் புதுமுகங்களில் ஒருவரான திரு ரேமண்ட் லாய், தேர்தல் முடிவுகளை மதிப்பதாகக் கூறி, செங்காங் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி குழுவினருக்குத் தமது வாழ்த்துகளைக் கூறிக்கொண்டார்.
வழக்கறிஞரான திரு லாய், “இது நல்லதொரு போட்டியாக இருந்தது,” என்றும் குறிப்பிட்டார்்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!