வாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்: ஈஸ்வரன்

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான போட்டியில் மக்கள் செயல் கட்சி (மசெக) அணி 51.69 வாக்குகள் பெற்று முன்னாள் மசெக நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் டான் செங் போக்கின் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை வெற்றி கண்டது.

கடந்த 2015 பொதுத் தேர்தலில் மசெக அணி, சீர்த்திருத்தக் கட்சியைத் தோற்கடித்து 78.57 வாக்குகளைப் பெற்றது. ஆனால் இம்முறை அதற்கு 26% குறைவாக வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் கோஸ்ட்டில் குழுத் தொகுதியில் பதிவான 146,251 வாக்குகளில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு 48.31% வாக்குகள் கிடைத்தன.

வெஸ்ட் கோஸ்ட் மசெக அணிக்குத் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த வெற்றியின் மூலம் அவர் தொடர்ந்து ஆறாவது முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வு பெற்றிருக்கிறார்.

வெஸ்ட் கோஸ்ட் தொகுதி 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து திரு ஈஸ்வரன் பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.

அதிலிருந்து வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மசெக இரண்டு முறை போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இரண்டு தேர்தல்களில் பாட்டாளிக் கட்சி, சீர்திருத்தக் கட்சி ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்நோக்கியுள்ளது. அந்த இரு முறையும் 66.6% வாக்கு

களுக்குக் குறைவாக மசெக அணி எடுத்ததில்லை.

இந்தப் பொதுத் தேர்தலில்தான் மசெக அணி குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

திரு ஈஸ்வரனின் அணியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, திருவாட்டி ஃபூ மீ ஹார், திரு அங் வெய் நெங், புதிய வேட்பாளரான திருவாட்டி சேச்சல் லூ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் டாக்டர் டான் செங் போக், திரு லியோங் வாய் மன், திருவாட்டி ஹேசல் புவா, திரு என். லோகநாதன், திரு ஜெஃப்ரி கூ ஆகியோரை போட்டியில் சந்தித்தனர்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஈஸ்வரன், அக்குழுத் தொகுதி வாக்காளர்களுக்கும் தங்களுக்கு கடுமையான போட்டி கொடுத்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணிக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“முக்கிய அம்சமாக, சிமு கட்சி வெஸ்ட் கோஸ்ட் வாக்காளர்

களுக்கு அவர்களுக்கு உள்ள பிரச்சி னைகள் பற்றி சிந்தித்து வாக்களிக்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. அந்த வகையில் வாக்காளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எங்கள் அணியைத் தேர்வு செய்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.

முன்னைய தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து கேட்கப்பட்டதற்கு, “தேர்தலில் வாக்குகள் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் குழுத் தொகுதி ரீதியிலும் கட்சி ரீதியிலும் ஆராய்வோம்.

“அதற்கேற்றவாறு, வாக்காளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யதேசிய கொள்கைகள், திட்டங்கள் மூலமாக தகுந்த ஏற்பாடுகளுக்கு முயற்சி செய்வோம்,” என்று தமது அணி சார்பில் பதிலளித்தார் அமைச்சர் ஈஸ்வரன்.