தனித் தொகுதிகளில் மசெக பெண் வேட்பாளர்கள் சிறப்பான வெற்றி பெற்றனர்

புதிதாக உருவாக்கப்பட்ட மேரிமவுண்ட் தனித் தொகுதி அணுக்கமாகக் கவனிக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று. அதில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் ராணுவப் பின்னணியைக் கொண்டவர்கள்.

முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட சிங்கப்பூரின் முதல் பெண் பிரிகேடியர் ஜெனரலான மசெக வேட்பாளர் கான் சியோ ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயான திருமதி கான், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைத் தளபதி யாக இருந்தார். அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு ஏப்ரல் மாதம் தேசிய தொழிற்சங்க காங்கி ரஸின் வேலை நியமன, வேலைத் தகுதி கழகத்தில் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு உயர் பதவி அளிக்கப்படும் என்று பேசப்பட்டது.

திருவாட்டி காலை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கர்னலான ஆங் யோங் குவான் 44.96% வாக்கு களைப் பெற்றார். அவருக்கு இது மூன்றாவது தேர்தலாகும்.

தனித் தொகுதிகளில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களில் முதலிடம் பிடித்தவர் மசெகவின் டின் பெய் லிங். மெக்பர்சனில் 71.74% வாக்கு களைப் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற மக்கள் சக்தி கட்சியின் திரு கோ மெங் செங் பெற்ற வாக்குகள் 28.26%.

யூஹுவா தனித் தொகுதியில் 70.54% வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரான வயது கிரேஸ் ஃபூ. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் திரு ராபின் லோ 29.46% வாக்குகளைப் பெற்றார்.

இந்த பொதுத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட்ட ஒரே முழு அமைச்சரான இவர், கடந்த 14 ஆண்டுகளாக இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

“இந்த ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், பிரசார காலத்தில் எனக்கு மிகவும் ஊக்கமளித்த எனது குடியிருப்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு நன்றி,” என்று அவர் கூறினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றார் உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளரான மசெகவின் திருவாட்டி சுன் சூலிங்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சி வேட்பாளர் டான் சென் சென் 39.03% வாக்குகளைப் பெற்றார்.

ஹோங் கா நார்த் தனித் தொகுதியில் சுகாதார, சுற்றுப்புற நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் 60.98% வாக்கு களுடன் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் திருமதி ஜிஜீன் வோங் 39.02% வாக்குகளைப் பெற்றார்.

2015 தேர்தலில் சிறந்த வெற்றி யைப் பெற்றவர்களில் ஒருவர் டாக்டர் ஏமி கோர். அந்த ஆண்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் மக்கள் கட்சியின் திரு ரவி பிலேமோனுக்கு எதிராக அவர் 74.76% வாக்குகளைப் பெற்றார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு பலதுறை மருந்தகம், ஓர் உணவங்காடி, ஞாபக மறதி நோயாளிகளுக்கான ஒரு பூங்கா உள்ளிட்ட திட்டங்களை ஹோங் கா நார்த் தொகுதிக்கு அவர் அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!