அமைச்சர் சண்முகம்: வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்

நீ சூன் குழுத்தொகுதியில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தலைமையில் களம் கண்ட மசெக அணி, 61.9% வாக்குகளைப் பெற்று அத்தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டது.

ஐந்து உறுப்பினர் குழுத்தொகுதியான நீ சூனில் மசெகவை எதிர்த்து புதிய கட்சியான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது.

இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம், லுயிஸ் இங், டெரிக் கோ, கேரி டான் ஆகியோர் மசெக அணி சார்பில் போட்டியிட்ட மற்ற நான்கு வேட்பாளர்கள்.

கடந்த இரு தேர்தல்களில் நீ சூன் குழுத்தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவராக இருந்த திருவாட்டி லீ பீ வாவிற்குப் பதிலாக இம்முறை அறக்கட்டளை நிறுவனரான திருவாட்டி கேரி டான் இடம்பெற்றார்.

சிமுக தரப்பில் கலா மாணிக்கம், தௌஃபிக் சுபான், பிராட்லி போயர், ஸ்ரீ நல்லகருப்பன், டேமியன் டே ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமது அணியை மீண்டும் வெற்றிபெறச் செய்த நீ சூன் குழுத்தொகுதிவாசிகளுக்கு ஃபேஸ்புக் வழியாக நன்றி கூறிக்கொண்டார் அமைச்சர் சண்முகம்.

“அன்பான நீ சூன் குடியிருப்பாளர்களே! நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் உங்களது ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து கடுமையாக உழைத்து, எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குடியிருப்பாளர்களும் அவர்களின் குழந்தைகளும் வாழ்வதற்குச் சிறந்த இடமாக நீ சூனை உருவாக்க தாங்கள் பாடுபடுவோம் என்றும் திரு சண்முகம் கூறியிருக்கிறார்.

அதேபோல, மீண்டும் ஒருமுறை தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தமைக்காக தொகுதிவாசிகளுக்கு நன்றியுரைத்த திருவாட்டி டான், மக்களின் கோரிக்கைகளுக்குத் தொடர்ந்து செவிமடுப்பதோடு, உளப்பூர்வமாகவும் அவற்றைக் கேட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

2015 தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதி மசெக அணி 66.8% வாக்குகளையும் 2011 தேர்தலில் 58.4% வாக்குகளையும் பெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!