ஹவ்காங் தனித் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டது

ஹவ்காங் தனித் தொகுதி, ‘பாட்டாளிக் கட்சியின் கோட்டை’ என்பது இந்தத் தேர்தலில் உறுதியாகி இருக்கிறது. இந்தத் தொகுதியில் புது முகத்தை பாட்டாளிக் கட்சி களம் இறக்கியது. என்றாலும் 61.19 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று கட்சி பெரும் வெற்றி பெற்றது.

பாட்டாளிக் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய கப்பல் துறை வழக்கறிஞர் டெனிஸ் டான், 49, மக்கள் செயல் கட்சி சார்பில் போட்டி இட்ட லீ ஹோங் சுவாங், 50, என்ற தகவல் தொழில்நுட்பத் துறை நிர்வாகியைத் தோற்கடித்தார்.

மக்கள் செயல் கட்சிக்கு 38.81 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன. சென்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட பாட்டாளிக் கட்சி வேட்பாளர் பிங் எங் ஹுவாட் 57.7% வாக்குகளைப் பெற்று வென்றிருந்தார். அவருக்கு பதிலாக திரு டெனிஸ் டானை பாட்டாளிக் கட்சி களமிறக்கியது. திரு டான் மூன்று ஆண்டுகள் முன்பே தொகுதியில் பிரபலமடையத் தொடங்கினார்.

வெற்றி பெற்ற திரு டான், தொகுதிவாசிகளுக்கு நன்றி கூறினார்.

“ஹவ்காங் எழுச்சி இன்று வெளிப்படையாகத் தெரியவந்து ள்ளது. சிங்கப்பூரில் ஜனநாயகத்துக்கு அடையாளமாக ஹவ்காங் குறிப்பிடப்படுவது ஏன் என்பது இந்த வெற்றி மூலம் புரிகிறது,” என்றார் அவர்.

தலைசிறந்த முறையில் தொகுதி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் களுக்காக குரல்கொடுக்கப் போவதாகவும் திரு டான் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!