பாட்டாளிக் கட்சியைப் பாராட்டிய லீ சியன் யாங்

நாட்டுப்பற்று இருக்கும் அதே வேளையில் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது சாத்தியமான ஒன்று என சிங்கப்பூரர்கள் காட்டியிருப்பதாக திரு லீ சியன் யாங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தார். கொரோனா நெருக்கடி

நிலையில் நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள் செயல் கட்சி எளிதில் வென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட திரு லீ சியன் யாங், அதற்கு மாறாக அதன் வாக்கு விகிதம் கணிசமான அளவு குறைந்திருப்பதைச் சுட்டினார். சிங்கப்பூரின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் எதிர்க்கட்சிகளுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

“பாட்டாளிக் கட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அக்கட்சி இரண்டு குழுத் தொகுதிகளையும் ஒரு தனித் தொகுதியையும் வென்றுள்ளது. சிறந்த தலைமைத்துவத்தை அது வெளிப்படுத்தியுள்ளது. தலைமைத்துவ மாற்றத்தை அது சுமுகமாக நடத்திக் காட்டிஉள்ளது. வுலுவான, துடிப்புமிக்க, இளமையான, பல பின்னணிகளைக் கொண்ட அணியினரை அது களம் இறக்கியது,” என்று பிரதமர் லீ சியன் லூங்கின் இளைய சகோதரரான திரு லீ சியன் யாங் பாராட்டி னார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு சராசரியாக 40 விழுக்காடு வாக்குகள் கிடைத்தது பெரிய சாதனை என்றார் அவர்.