ரெனோ ஃபோங்: கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன

தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59 விழுக்காடு வாக்குகளைப் பெற்று திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணியிடம் தோல்வியைத் தழுவியது.

இருப்பினும், 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டில் அது 27.94 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்திருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்குத் தலைமை தாங்கிய திரு ரெனோ ஃபோங் தெரிதித்தார்.

தேர்தல் முடிவுகள் தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் வாக்காளர்களின் முடிவை மதிப்பதாக அவர் கூறினார்.