டான்: வாக்குகள் குறைந்தது பற்றி மசெக ஆழ்ந்து ஆராயும்

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பொதுவாக மக்கள் செயல் கட்சிக்கு வாக்குகள் குறைந்ததற்கான விரிவான காரணங்கள் பற்றி ஆழ்ந்து ஆராயப்படும் என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்துள்ளார். மரின் பரே ட் குழுத் தொகுதி உட்பட ஆளும் மக்கள் செயல் கட்சி பெற்ற ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.

இந்தப் பொதுத் தேர்தலில், மெக்பர்சன், மசெக பெற்ற வாக்குகளின் விகிதம் 61.24%. அதில் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதிகள் தவிர்த்து, மற்ற குழுத் தொகுதிகளிலும் தனித்தொகுதிகளிலும் அதல் வாக்கு விகிதம்
குறைந்தது. மரின் பரேட் குழுத்தொகுதியில் திரு டா ன் தலைமையிலான மசெக அணி, பாட்டாளிக் கட்சி அணியை 57.76% வாக்குகளுடன் தோற்கடித்தது. பாட்டாளிக்
கட்சி பெற்ற வாக்குகள் விகிதம் 42.24%.

2015 பொதுத் தேர்தலில் மசெக அணி 64.07% வாக்குகளைப் பெற்று வென்றது. ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சொக் டோங் அரசியலிலிருந்து ஓய்வுபெற்றது குறைவான வாக்குகள் பெற்றதற்கு ஒரு காரணமாக சொல்ல
முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, எப்படி இருந்தாலும் திரு கோ ஒருநாள் ஒய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும் என்று பதிலளித்தார்.

“இது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மட்டும் நிகழ்ந்தது அல்ல . அப்படி ஒரு காரணத்தால் இவ்வாறு அமைந்தது என்றால் அது மற்ற தொகுதிகளைப் பாதித்திருக்காது. ஆக, இது விரிவான பல விவகாரங்கள் பற்றியதே ஒரு
குறிப்பிட்ட விவகாரத்தின் காரணமாக இருக்காது என்றார் திரு டான்.

திரு டானின் அணியில் மூத்த துணை அமைச்சர் எட்வின் டான், புதுமுகங்களான டாக்டர் டான் சீ லெங் , முகம்மது ஃபாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இளைய வாக்காளர்கள் பற்றி கருத்துரைத்த டாக்டர் டா ன் சீ லெங் , “அவர்களின் குரல்கள் அதிகமாகக் கேட்கப்படுகின்றன என்று இளையர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் அக்கறைகள் என்ன என்று இன்னும் பல கலந்துரையாடல்கள் வழி தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!