குடியிருப்பாளர்களைச் சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்நிகர் கூட்டங்களுக்கு ஏற்பாடு

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை மெய்நிகர் இணைப்பு வழி நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அவர்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் மெய்நிகர் சந்திப்புகளில் குடியிருப்பாளர்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதை விளக்கும் தகவல்களைப் பதிவிட்டுள்ளனர்.

செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர், கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றான பாதுகாப்பு தூர இடைவெளி தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்பதால், அவரது உட்லண்ட்ஸ் தொகுதி மக்கள் சந்திப்புக் கூட்டங்களை ஒவ்வொரு திங்கட்கிழமையன்று மெய்நிகர் நிகழ்ச்சி மூலமாகவும் அல்லது மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் நடத்த திட்டமிட்டுள்ளார்.

“மின்னஞ்சல் வசதி இல்லாதவர்களுக்கு உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 83, புளோக் 852ல் உள்ள மசெக அலுவலகத்தில் குடியிருப்பாளர்களின் தேவைகளை அறிந்து குறிப்பெடுத்துக்கொள்ள ஒரு சிறிய மசெக ஆர்வலர்கள் குழு இருக்கும்.

“பாதுகாப்பு தூர இடைவெளி தொடர்பான விதிகளைப் பின்பற்றும் அதேவேளையில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களையும் தொடர்ந்து நடத்திட நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம். மேலும் எங்கள் குழுத் தொகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் தொகுதியின் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் பங்கேற்க முடியவில்லை என்றால் அவர்கள் குழுத் தொகுதியில் உள்ள மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கின்றனர்,” என்றும் திருவாட்டி மரியம் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

திருவாட்டி மரியமைத் தவிர செம்பவாங் குழுத் தொகுதியில் கல்வி அமைச்சர் ஓங் யி காங், திரு விக்ரம் நாயர், டாக்டர் லிம் வீ கியாக், திருவாட்டி போ லி சான் ஆகியோரும் உள்ளனர்.

“இதன் மூலம் அவசரத் தேவைகள் உடைய குடியிருப்பாளர்கள் தங்கள் கோரிக்கையைத் தெரிவிக்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்களின் கோரிக்கையை தமது நாடாளுமன்ற உறுப்பினரிடம் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிப்பது ஒரு வழி. இல்லையேல், அவர்கள் குழுத் தொகுதியில் உள்ள மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடலாம். இது ஒரு குழுவாக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் உத்தி,” என்று மேலும் விளக்கினார் திருவாட்டி மரியம்.

தஞ்சோங் பகார் குழுத் தொகுதியின் எல்வின் டான், மேரிமவுண்ட் தனித்தொகுதியின் கான் சியாவ் ஹுவாங் போன்ற புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை வாட்ஸ்அப், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் நடந்த முடிவெடுத்துள்ளனர்.

இதற்கிடையே, அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 93 வேட்பாளர்களும் இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று அழைக்கப்படலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி டான் மெங் டுய் தெரி வித்ததாக நேற்று அரசிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!