லியோங் மன் வாய், ஹேசல் புவா ஆகியோரை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உதவி தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய், கட்சியின் துணைத் தலைவர் ஹேசல் புவா ஆகியோர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (ஜூலை 14) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் அறிவித்தார்.

தாம் ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததையும், தமது குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினரானால், அவை நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் குறிப்பிட்டு, தாம் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று டாக்டர் டான் முன்பே தெரிவித்திருந்தார்.

திரு லியோங், திருவாட்டி புவா ஆகியோர் வெஸ்ட்கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டிருந்தனர். அந்தத் தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 48.31% வாக்குகள் பெற்றிருந்தது.

தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது.

தேர்தல் பிரசாரத்தின்போது தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பற்றி இந்தக் கட்சி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமது கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையில் பாட்டாளிக் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் டாக்டர் டான் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!