6,400க்கும் மேற்பட்டோர் $90 மில்லியனுக்கு மேல் இழப்பது தடுக்கப்பட்டுள்ளது

6,400க்கும் மேற்பட்டோர் $90 மில்லியனுக்கு மேல் இழப்பது தடுக்கப்பட்டுள்ளது

1 mins read
7def994b-f1c8-49c0-8ca2-62dccf22eb71
இரண்டு மாத கூட்டு நடவடிக்கையின்போது வங்கி ஊழியர்களுடன் பணியாற்றும் ஊழல் தடுப்பு மைய அதிகாரி ஒருவர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

காவல்துறையின் ஊழல் எதிர்ப்பு நிலையம் (எஎஸ்சி) மற்றும் ஆறு வங்கிகள் இணைந்து மேற்கொண்ட இரண்டு மாத கூட்டு நடவடிக்கையின்போது 6,400க்கும் மேற்பட்டோர், $90 மில்லியனுக்கும் அதிகமான மொத்த இழப்பைத் தவிர்க்க முடிந்தது.

டிபிஎஸ் வங்கி, யுஓபி வங்கி, ஓசிபிசி வங்கி, எச்எஸ்பிசி வங்கி, ஜிஎக்ஸ்எஸ் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவை அந்த வங்கிகள் என்று செப்டம்பர் 6 ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான நடவடிக்கையின்போது, ​​வேலைகள், முதலீடுகள், போலி நண்பர் அழைப்புகள் மற்றும் மின் வர்த்தகம் தொடர்பான மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய இயந்திரமனித செயல்முறையிலான தானியக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

மேலும் பணப் பரிமாற்றங்கள் நடைபெறாமல் தடுக்க, மோசடிக்கு இலக்கு வைக்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி விழிப்பூட்டல்களை அனுப்புவதன் மூலம், மோசடிகள் நிகழாமல் தடுக்க முடிந்தது.

மொத்தத்தில், மோசடிக்கு ஆளாகக்கூடிய வங்கிகளின் உத்தேச வாடிக்கையாளர்கள் 6,464 பேருக்கு ஏஎஸ்சி அதிகாரிகள் 8,485 குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். இதன் விளைவாக சுமார் 2,016 மோசடிகள் தடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

பொது மக்கள் 1800-722-6688 என்ற எண்ணில் ஊழல் தடுப்பு உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது மோசடிகள் பற்றி மேலும் அறிய www.scamalert.sg இணையத் தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்