வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பூரின் சமூக வளர்ச்சிக்கு உதவி, உறுதுணை

தமது வாழ்க்கையில் ஒளியேற்றிய சிங்கப்பூருக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் மற்ற சிங்கப்பூரர்களின் வாழ்வை மேம்படுத்தும் தொண்டூழியப் பணியைத் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக்கியுள்ளார் திரு இராசநாயகம் சர்வானந்தன். இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சிங்கப்பூர் மக்களுக்காக தொண்டூழிய பணியில் விவேகத்துடன் ஈடுபட்டு வருகிறார்.


கட்டடப் பொறியாளராக இலங்கையில் 23 வயதில் பணிபுரிய தொடங்கிய இவர், பிறகு கத்தாரில் சில ஆண்டுகள் வேலை செய்து வந்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு தமது எதிர்காலத்தை ஒரு கேள்விக்குறியாகக் கருதிய திரு சர்வானந்தன், தாம் பணிபுரிந்த கட்டுமான நிறுவன முதலாளியின் பரிந்துரையின் பேரில் சிங்கப்பூருக்கு வந்தார்.


1994ஆம் ஆண்டில் தமது 28வது வயதில் சிங்கப்பூரில் ஒரு பொறியாளராக பணிபுரியத் தொடங்கிய இவருக்கு பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரின் நிம்மதியான, ஒற்றுமையான சூழல் ஆச்சரியத்தைத் தந்தது.


இங்குள்ள நிம்மதியான சூழல் தமது வாழ்க்கையைச் சிறப்பாகக் கொண்டு செல்வதற்கு ஒரு நல்ல இடமாக இருக்கும் என்று எண்ணி தமது மனைவியையும் சிங்கப்பூருக்கு வரவழைத்தார்.


2001ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்ற இவர், தமது வாழ்க்கையில் நிலைத்தன்மையைக் கொண்டு வந்ததற்கு நன்றி கூறும் வகையில் சிங்கப்பூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்.


இவரது ஜூரோங் ஈஸ்ட் வீட்டிற்கு ஒரு நாள் யூஹுவா அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் கலாசார, சமூக இளையர்துறை அமைச்சருமான கிரேஸ் ஃபூ வந்திருந்தார்.


ஒரு பொறியாளராகப் பணிபுரிந்த திரு சர்வானந்தன், சமூகத் தொண்டூழியத்தில் ஈடுபடுவதற்கு திருவாட்டி கிரேஸ் ஃபூ ஊக்குவிக்க, 2009ஆம் ஆண்டில் யூஹுவா அடித்தள அமைப்புகளில் ஒரு தொண்டூழியராக தமது சமூகப் பணியை இவர் தொடங்கினார்.

வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு அதன் வழி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், குடியிருப்பாளர்கள் வருகை போன்ற தொண்டூழிய பணிகளில் இவர் முழுமூச்சாக இறங்கினார்.


இக்குழுவைச் சேர்ந்த திரு சர்வானந்தன் ‘சிபிஆர்’ எனப்படும் இதய இயக்கமீட்பு சிகிச்சையையும் இதயத்துடிப்பைச் சீர்செய்யும் கையடக்கக் கருவி பயிலரங்கையும் தமது குழுவுடன் நடத்தி வருகிறார்.


வார இறுதி நாட்களில் ‘சிபிஆர்’ மற்றும் ‘ஏஇடி’ கையடக்கக் கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்றும் உத்திகளைப் பொது மக்களுக்குக் கற்றுக்கொடுக்கும் தொண்டூழியர்களை திரு சர்வானந்தன் மேற்பார்வையிடுகிறார்.


‘சிபிஆர்’ பயிற்சியைப் பெற்ற இவர், இதற்கான நோக்கத்தை விவரித்ததுடன் இப்பயிற்சியின் பயன்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

“மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் நடத்தப்படும் இந்தப் பயிலரங்கில் இதுவரை ஆயிரக்கணக்கான யூஹுவா குடியிருப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

‘‘தவறாக ‘சிபிஆர்’ செய்து ஒருவரை கொன்றுவிடுவோமோ என்றும் ‘சிபிஆர்’ செய்வதன் மூலம் ஒருவரின் விலா எழும்பை உடைத்து விடுவோமோ என்ற பயத்தினாலும் சிலர் இப்பயிலரங்குக்கு வரத் தயங்குகின்றனர்.


‘‘ஆனால், ஆபத்தில் இருக்கும் ஒருவரை உடனே காக்கும் திறனை இவர்கள் இப்பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒருவராவது இத்திறனைப் பெறுவதன் மூலம் பொதுமக்களை மட்டுமல்லாமல் அவரவர்களின் குடும்பத்தினரையும் காப்பாற்றலாம்,” என்றார் 55 வயது திரு சர்வானந்தன்.


அதுமட்டுமல்லாமல், தற்போது ஜூரோங்/கிளமெண்டி நகர மன்ற ஆலோசகரும் யூஹுவா வட்டார 5ன் குடியிருப்பாளர் குழு செயலாளருமான திரு சர்வானந்தன், யூஹுவா குடிமக்கள் ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். சமூக இணக்கத்தை வளர்ப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார் இவர்.

"பல்வேறு நிகழ்ச்சிகளில் தொண்டூழியப் பணி ஆற்று வதால் பல இன மக்களுடன் ஒருமித்த சமூகத்தினராக இயல்பாகப் பழகி உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. இதனால் நான் அவர்களுடன் இணைந்து செயல்படவும் பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் தொடர்ந்து புரிந்துணர்வோடும் இருக்க முடிகிறது," - இராசநாயகம் சர்வானந்தன்


வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இடையே, ஒரு கட்டுமான நிறுவனத்தின் திட்டத் தலைவராக பணியாற்றிவரும் இவர், தமது ஓய்வு நேரத்தை சமூக மேம்பாட்டுக்கு அற்பணித்துள்ளார்.

“சமூக தொண்டைச் செய்வதன் மூலம் பல பின்னணிகளிலிருந்து வரும் சமூகத்தினரைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கிறது.


“பல நிகழ்ச்சிகளில் தொண்டூழிய பணி ஆற்றுவதால் பல இன மக்களுடன் ஒருமித்த சமூகத்தினராக இயல்பாகப் பழகி உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கின்றது. இதனால், நான் அவர்களுடன் இணைந்து செயல்படவும் பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் தொடர்ந்து புரிந்துணர்வோடும் ஒற்றுமையுடனும் வாழ ஊக்கம் பெறுகிறேன்,” என்றார் திரு சர்வானந்தன்.


தமது மனைவியின் ஆதரவு இந்த சமூகப்பணியைச் செவ்வனே செய்துவர உதவுவதாக அவர் கூறினார். தமது வாழ்க்கையை மலர்ச்சியான ஒன்றாக அமைய உதவிய சிங்கப்பூருக்கு சமூக தொண்டூழியம் செய்வது அவசியம் என்று கருதும் இவர், தம்முடைய இரு மகன்களையும் யூஹுவா சமூக மன்றத்தில் தொண்டூழியர்களாக சேர்த்துள்ளார்.


தற்போது பட்டக்கல்வியை மேற்கொண்டு வரும் இவரது மகன்களான 24 வயது திரு சர்வானந்தன் ரகுமயுரன், 22 வயது திரு சர்வானந்தன் ராஜ்ராகவன் இருவரும் யூஹுவா சமூக மன்ற ‘சி2இ’ குழு நடத்தும் ‘சிபிஆர்’ மற்றும் ‘ஏஇடி’ தொடர்பிலான பயிலரங்குகளை நடத்துவதிலும் மற்ற அவசரநிலை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் உதவி வருகின்றனர்.

SPH Brightcove Video
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!