குடும்பத்தினர் ஆரோக்கியத்திற்காக 108 அலகுகளைக் குத்திக்கொண்டு காவடி எடுத்த பக்தர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு சகோதரர்களின் பிரதிநிதியாக அலகுக் காவடி எடுத்தார் 55 வயதாகும் கனகராஜா நடராஜா. 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறுவரும் தொடர்ந்து காவடி எடுத்து வருகின்றனர். இவ்வாண்டு அவர்களில் இளையரான அரசாங்க ஊழியர் திரு கனகராஜா உடல் முழுவதும் 108 அலகுகளை குத்திக்கொண்டு அலகு காவடி ஏந்தினார். 

கொவிட்-19 காலத்தில் குடும்பத்தில் பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டதை நினைவுகூர்ந்த இவர், இனி குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் குறையின்றி செழிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

ஈராண்டுகளுக்கு முன்னர் பக்கவாதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மனைவியின் உடல்நலம் தேறுவதற்காக வேண்டிக்கொண்டுள்ளார் 73 வயது ரேமண்ட் ரிச்மண்ட். 

வியாட்நாம் நாட்டைச் சேர்ந்த 73 வயது பிசமார்ன் ரிச்மண்டிற்கு இப்பாதிப்பினால் இடது காலும் கையும் செயலிழந்துவிட்டன. ஆரோக்கியம் செழிக்க வேண்டி அவரும், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவரின் மனைவியும் பால்குடம் ஏந்தி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். 

பலமுறை காவடிகளும் பால்குடங்களும் எடுத்துவந்துள்ள ரேமண்ட் இரு மகன்கள், ஒரு மகள், ஒன்பது பேரப்பிள்ளைகள் என குடும்பத்துடன் திருவிழாவில் பங்கேற்றார். நிறைவான இத்திருவிழாவில் காணிக்கை செலுத்தியது பூரண குணத்தை தரும் என மனப்பூர்வமாக நம்பிக்கை தெரிவித்தார் திருவாட்டி பிசமார்ன். 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!