சிங்கப்பூருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சம்பவம்: கார் ஓட்டுநர், பயணிகள் மீது குற்றச்சாட்டு

மலேசியாவிலிருந்து துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டதன் தொடர்பில் கார் ஓட்டுநர், காரிலிருந்த பயணிகள் இருவர் மீது இன்று சனிக்கிழமை காலை (ஏப்ரல் 9) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

துவாஸ் சோதனைச்சாவடியில் தானியக்க மோட்டார்சைக்கிள் தடங்களுக்கு இடையிலான முகப்பின் மீது அந்த ஓட்டுநர் காரை மோதியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரி ஒருவர் இதில் காயமுற்றார்.

சிங்கப்பூரரான டியோ தியாம் லெங், 46, என்பவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி காயம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டும் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

அந்த காரில் இருந்த இரு பயணிகள் மீது சிங்கப்பூருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக ஆளுக்கு ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வியட்னாமியரான ஹோ தி மை நுங், 31, என்பவரும் சீன நாட்டவரான சென் சோங்சிங், 35, என்பவரும் அவ்விரு பயணிகள்.

காணொளி இணைப்பு வாயிலாக அந்த மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சென் மருத்துவமனையில் உள்ளார்.

மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனம் ஒன்றை ஓட்டிய டியோ, நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) அதிகாலை 2.20 மணியளவில் மலேசிய சோதனைச்சாவடியில் குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்றாமல், துவாஸ் சோதனைச்சாவடியை நோக்கி காரை வேகமாக ஓட்டினார். அவரை மலேசிய போக்குவரத்து காவல்துறையினர் பின்தொடர்ந்தனர்.

துவாஸ் சோதனைச்சாவடி நுழைவாயிலில் இருந்த துணைக் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த கார் வருவதைக் கவனித்தார். அவர் உடனடியாக எச்சரிக்கை மணியை எழுப்பினார். சோதனைச்சாவடி முடக்கப்பட்டது.

தானியக்க மோட்டார்சைக்கிள் தடங்கள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய டியோ முற்பட்டார். எனினும், தடங்கள் ஒடுக்கமாக இருந்ததால் முகப்புகள் மீது அவரது கார் மோதியது.

பிந்திய ஒரு தேதியில் டியோவும் காரிலிருந்த இரு பயணிகளும் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

டியோவை காவல்துறையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் தேடி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரியிவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!