உரிமம் இல்லாது கடன் வழங்கும் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு சிறை, அபராதம்

உரிமம் இல்லாது கடன் வழங்கும் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு சிறை, அபராதம்

1 mins read
6041150d-05ca-4ca9-908f-17411eaa59c5
உரிமம் இல்லாது கடன் வழங்கிய குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஐந்து குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கையாண்டது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு என மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை டான் கெங் வீ ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உரிமம் இல்லாது கடன் வழங்கும் குற்றத்தில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தோரை நிர்வகித்த ஆடவருக்குத் திங்கட்கிழமையன்று (மார்ச் 30) நான்கு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையும், $1 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டன.

நீதிமன்ற ஆவணங்களின்படி, ஆகஸ்ட் 2005ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தக் குற்றம் மூலம் $3 மில்லியன் முதல் $5.2 மில்லியன் வரை லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான 49 வயது டான் கெங் வீ, 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனிப்பட்ட முறையில் $1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வருமானமாகப் பெற்றுள்ளார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர் கூடுதலாக 50 வாரங்கள் சிறையில் இருக்க நேரிடும்.

உரிமம் இல்லாது கடன் வழங்கிய குற்றச்செயல் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கையாண்டது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு என மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை டான் ஒப்புக்கொண்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளால் பெறப்பட்ட வருமானத்தைப் பயன்படுத்தி 2014ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் $1 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள ஒரு வீட்டை டான் வாங்கினார். மேலும் சீனாவிலும் சில சொத்துகளை வாங்கினார்.

2025ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து வந்து சிங்கப்பூரில் சரணடைய டான் முடிவெடுத்தார்.

அதே ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் சிங்கப்பூர் வந்தடைந்ததும் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்