கிளமெண்டி எம்ஆர்டி நிலைய முதலாளி எனத் தவறாகக் குறிப்பிடப்பட்ட ஆடவர்

கிளமெண்டி எம்ஆர்டி நிலைய முதலாளி எனத் தவறாகக் குறிப்பிடப்பட்ட ஆடவர்

1 mins read
95d0d154-4102-4e3a-a295-78d3957e6cf3
‘டிரேட்சோசியோ’ எனப்படும் நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் எரிக் கோ. - படம்: எரிக் கோ ஃபேஸ்புக்
Google News Preferred Icon

கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்தின் உரிமையாளராக ஆடவர் ஒருவர் கூகலில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அந்த விவரத்தை அறியாமலேயே எரிக் கோ எனப்படும் அவர், எம்ஆர்டி நிலையம் தொடர்பான பல கருத்துகளையும் விமர்சனங்களையும் பெற்றுவருகிறார்.

‘டிரேட்சோசியோ’ எனப்படும் நிதித் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உள்ளூர் தொழில்முனைவரான அவர், முதலில் அந்த எம்ஆர்டி நிலையத்தின் மேலாளராக கூகலில் தேவையின்றிப் பட்டியலிடப்பட்டிருந்தைக் கண்டு குழப்பமடைந்ததாகக் கூறினார்.

ஆயினும் இதற்கு முன்னர், சில நிறுவனங்களுக்காக ‘கூகல் பிஸ்னஸ்’ சுயவிவரங்களை நிர்வகிக்க விண்ணப்பித்திருந்ததால் அதனை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என ‘சாவ்பாவ்’ நாளிதழிடம் திரு.கோ கூறினார்.

ஆனால், மின்னஞ்சல் அறிவிப்பைத் திறந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. விமர்சனங்களும் கருத்துகளும் தமது நிறுவனத்தைப் பற்றியது அல்ல என்றும் கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்தைப் பற்றியது என்றும் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

கூகல் பிஸ்னஸ் சுயவிவரப் பக்கத்தில் கிளமெண்டி எம்ஆர் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமது மின்னஞ்சல் முகவரியை அவ்வப்போது மட்டுமே பார்ப்பதாகக் கூறிய அவர், அதில் பதிவிடப்படும் பயனர்களின் கருத்துகளையும் மதிப்பீடுகளையும் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை என்றார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கூகல் நிறுவனத்தையோ எஸ்எம்ஆர்டி நிறுவனத்தையோ தாம் தொடர்புகொள்ளவில்லை என்றும் அதற்கான எண்ணமும் இல்லை என்றும் திரு.கோ தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்