நடுத்தர வயதில் வேலை மாற்றம், வேலை வாய்ப்புகள்

முரசுடம் கேளுங்கள்: வேலை குறித்த கேள்வி பதில் தொடர்

பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம் (SGUnited Mid-Career Pathways Programme) அல்லது நிபுணத்துவ மாற்றுவேலைத் திட்டம் (Professional Conversion Programmes -PCP) இரண்டிற்கும் தேர்வுபெறுவது போட்டித்திறன்மிக்கதா?

ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு இத்தனை பேர்தான் முயற்சி செய்ய முடியும் என்ற வரம்பு உள்ளதா?

பயிற்சிக்காலத்தின் இடையே தகுந்ததொரு வேலை வேறு எங்காவது எனக்கு கிடைத்துவிட்டால், பயிற்சியை நிறுத்திவிட்டுச் செல்லும் தறுவாயில் அபராதம் செலுத்த வேண்டுமா?

ஒரு நிறுவனத்துடன் குறுகிய காலம் வேலை செய்வது அல்லது அவற்றுடன் இணைந்து வேலையுடன் பயிற்சியும் பெறுவது போன்ற வழிகளில் மத்திய வயதில் வேலை தேடுவோர் தொழில்நிறுவனங்களுக்குத் தேவையான தகுதித் திறன்களையும் அனுபவத்தையும் பெறுவதற்கு இந்த இரண்டு திட்டங்களும் வழிவகுக்கின்றன.

எந்த வேலைக்கு விண்ணப்பம் செய்தாலும் தேர்வுபெறுவது என்பது, பல காரணங்களைப் பொறுத்தே அமையும்.

விண்ணப்பிக்கும் பதவிக்கு இருக்கும் செல்வாக்கு, காலியாக உள்ள வேலைநிலை, விண்ணப்பதாரரின் பண்புக்கூறுகள் அல்லது பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நிறுவனத்தின் கலாசாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும். பயிற்சித் திட்டக் காலத்தின் இடையே வேறு வேலை கிடைத்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட அறிவிப்பு காலம் வரை பணியாற்ற வேண்டும்.

வேலைவாய்ப்பு பற்றிய உதவிகள் தேவைப்படுவோர் Careers Connect எனும் வாழ்க்கைத்தொழில் இணைப்பை நாடலாம்.

எஸ்ஜியுனைடெட் பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம் (SGUnited Mid-Career Pathways Programme) என்ற செயல்முறைத் திட்டத்தில் நான் பங்கேற்கவிருந்தால் நான் தற்பொழுது செய்யும் வேலையைவிட்டு விலக வேண்டுமா?

பயிற்சித் திட்டம் நடைமுறையில் உள்ள மாதங்களில் ஏற்படும் வருமான இழப்பை நான் எவ்வாறு ஈடுசெய்ய முடியும்?

ஒரு பயிற்சித் திட்டம் மூலமாகவோ, ஒரு நிறுவனத்துடன் இணைந்து குறுகிய காலம் பணியாற்றுவதன் வழியாகவோ, வேலை தேடுவோர் தொழில்நிறுவனங்கள் நாடும்திறன் கட்டமைப்புகளைப் பெற்றிட எஸ்ஜியுனைடெட் பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம் (SGUnited Mid-Career Pathways Programme) உதவி வழங்குகிறது.

ஏற்படும் செலவினங்களை ஓரளவு ஈடுசெய்வதற்கு பயிற்சி பெறுவோருக்கு அல்லது குறுகிய கால வேலை செய்வோருக்கு பயிற்சி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சிலருக்கு உங்கள் வருமானத்திலும் வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்படுவதைப் பரிசீலிக்க வேண்டும்.

எஸ்ஜியுனைடெட் பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம் (SGUnited Mid-Career Pathways Programme) பயிற்சிமுறையை மேற்கொண்டால், எனது முந்தைய வேலையில் ஈட்டிய அதே ஊதியம் கிடைக்குமா? எவ்வித ஊதிய மாற்றத்தை நான் எதிர்பார்க்கலாம்?

எஸ்ஜியுனைடெட் பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம் (SGUnited Mid-Career Pathways Programme) பயிற்சிக் காலத்தில் மாதாந்திர பயிற்சி ஊக்கத்தொகையாக உங்களின் குறுகிய கால வேலை வட்டத்தையும் வாய்ப்பையும் பொறுத்து $ 1,400 முதல் $ 3,000 வரை வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு நீங்கள் go.gov.sg/wsg-sgup-trainees இணையத்தளத்தைக் காணலாம்.


பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம் (SGUnited Mid-Career Pathways Programme) அல்லது நிபுணத்துவ மாற்றுவேலைத் திட்டம் (Professional Conversion Programmes -PCP) இவற்றில் எந்த ஒரு பயிற்சித் திட்டத்தில் நான் பங்கேற்றாலும், பயிற்சி முடிந்து எனக்கு முழுநேர வேலையை அந்த நிறுவனம் வழங்குமா?

பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம் (SGUnited Mid-Career Pathways Programme) பயிற்சிமுறையின்படி, பொருத்தம் அமைந்திருந்தால் குறுகிய கால வேலையை வழங்கிய சம்பந்தப்பட்ட நிறுவனம், பங்கேற்பாளருக்கு முழுநேர வேலையை வழங்கலாம். நிபுணத்துவ மாற்றுவேலைத் திட்டம் (Professional Conversion Programmes -PCP) பயிற்சிமுறையில் இரு வகையான பங்கேற்புகள் உள்ளன.

வேலையில் அமர்த்தி பயிற்சி அளிக்கும் முறையின்படி (Place-and-Train mode) வேலைதேடும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் எனப்படும் நால்வகைத் துறைகளில் உள்ள ஒருவர் (PMET) பங்கேற்கும் முதலாளியால் தேர்வுசெய்யப்பட்டு பின்னர் பணியில் அமர்த்தப்பட்டு புதிய தொழிலுக்குத் தேவையான பயிற்சிகள் அவருக்கு வழங்கப்படும்.

அடுத்த பயிற்சி முறையானது குறுகிய காலம் வேலையில் இணைந்து பயிற்சி பெறுதலாகும் (Attach-and-Train mode). அதன்படி, வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மற்றும் பயிற்சி அளிப்போர் வேலை தேடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதே வேளையில் குறுகிய கால வேலை வாய்ப்பையும் தருவார்கள்.

வாய்ப்பளிக்கும் முதலாளிகள் பயிற்சிகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கு முழுநேர வேலைகளை பயிற்சி முடிந்ததும் வழங்கலாம்.

நான் தற்போது ஒரு வேலையில் ஈடுபட்டு இருந்தாலும் நடுத்தர வயதில் வாழ்க்கைத்தொழிலை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தால், எந்தப் பயிற்சித் திட்டத்தை தேர்வுசெய்வது? பொருத்தமான துறையில் ஏதுவான தொழில் வட்டத்தையும் பயிற்சியையும் தேர்ந்தெடுப்பதில் எவற்றை நான் கருத்தில்கொள்ள வேண்டும்?

ஒரு மாற்றுத் தொழில்துறைக்குச் செல்ல விரும்பினால், உங்களது வாழ்க்கைத் தொழில் சார்ந்த கொள்கைகள், விருப்பங்கள், திறன்கள், சுயநடைமுறைகள் எந்த துறைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன என்பனவற்றை ஆராய்தல் வேண்டும். உங்களின் பண்புக்கூறுகள் இணையும் தொழில்துறைகளைக் கண்டறிந்து, எந்தஎந்த வேலைகளை நீங்கள் செய்ய முடியும் என்பதை அடையாளம் காண வேண்டும்.

நீங்கள் விரும்பும் தொழில்துறையில் இணைவதற்குத் தடையாக ஏதேனும் திறன்கள் உங்களிடம் இல்லையென்றால், அவற்றை நீக்கும் வகையில் முறையான பயிற்சிகளைத் தேட சுயஆய்வு உதவும். அந்த தொழில் வட்டத்தின் வேலை கலாசாரத்தைப் பற்றி மேலும் விவரம் அறிய அதில் ஈடுபட்டுள்ள நண்பர்களிடமும் தொடர்புகளிடமும் பேசி ஆராயுங்கள். அந்த தொழில் வட்டமோ பதவியோ உங்களுக்கு முற்றிலும் புதிதாக இருந்தால் ஊதிய மாற்றங்களுக்கு நீங்கள் மனதளவில் தயாராக வேண்டும்.

வேலையில் இருந்தபடியே பயிற்சி பெறுதல், மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி WSG எனும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு நடத்துகின்ற நிபுணத்துவ மாற்றுவேலைத் திட்டம் (Professional Conversion Programmes -PCP) போன்ற சில பயிற்சிமுறைகள் புதிய வேலை வட்டாரங்களில் நீங்கள் சுமூகமாக அமர்வதற்கு உதவுகின்றன.

நாங்கள் மேலும் உதவிடவும் எங்களிடம் பேசவும் Careers Connect (வாழ்க்கைத்தொழில் இணைப்பு) வழியாக தொடர்புகொள்ளவும்.

மேல் விவரங்களுக்கு நீங்கள் காணவேண்டிய இணையத்தளம் www.go.gov.sg/ccmcf-careertrial.

இந்திரா ராமசுந்தரன்,
மூத்த வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்

சான்றிதழ் பெற்ற வாழ்க்கைத் தொழில் மேம்பாட்டாளர் இவர், வேலையிட பயிற்றுவிப்பாளர், பத்து வருட மனிதவள பின்னணி அனுபவம் உள்ள வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்.
நேர்முகப் பேட்டிகள், தன்விவரப் பட்டியல் தயாரிப்பு, பராமரிப்பு, வேலையைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் போன்றவற்றை உள்ளடக்கிய வேலைக்குத் தயாராக்கும் பயிலரங்குகளை ஏற்பாடு செய்வதிலும் பயிற்சிகள் வழங்குவதிலும் அனுபவம் நிறைந்தவர். வாழ்க்கைத்தொழில் சோதனைகளைச் சார்ந்த வலுவான திறன் பட்டியலில் சான்றிதழ் பெற்ற பரிவர்த்தனைப் பகுப்பாய்வாளர். ஆலோசனைத் துறையிலும் இவர் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.

===============================================================================================================================================================

வேலை வாய்ப்பு தொடர்பில் ஏதாவது கேள்விகள் உள்ளனவா?

Careers Connect நிலையங்களுக்குச் சென்றால் வேலை தொடர்பில் எத்தகைய உதவி கிடைக்கக்கூடும் என்பதை அறிவீர்களா?

‘முரசிடம் கேளுங்கள்’ என்ற இக்கேள்வி பதில் தொடருடன் எங்களோடு இணைக.
உங்கள் ஐயங்களைத் தீர்க்க, சிங்கப்பூர் ஊழியரணி கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளிக்கும்.
கேள்விகளை tamilmurasu@sph.com.sg
எனும் இணைய முகவரிக்கு அனுப்புங்கள்.
கூடிய விரைவில் பதில்களுடன் உங்களை சந்திக்கிறோம்!

.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!