விற்பனைகளை ரத்து செய்யவிருக்கும் மிட்சுபிஷி நிறுவனம்

விற்பனைகளை ரத்து செய்யவிருக்கும் மிட்சுபிஷி நிறுவனம்

1 mins read
e97ec241-fad8-4410-8939-6657541b3b1e
மிட்சுபிஷி நிறுவனம், 2025ஆம் ஆண்டுவரை அதன் விற்பனையை ரத்து செய்யவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் மிட்சுபிஷி கார் விற்பனை அடுத்த ஆண்டு ரத்துசெய்யப்படும். வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் மறுஆய்வுசெய்யப்பட்ட கரிம வெளியேற்றத் திட்டமே அதற்குக் காரணம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

இந்த மாற்றம் தற்போதுள்ள கார் உரிமையாளர்களைப் பாதிக்காது. மிட்சுபிஷியைப் பிரதிநிதிக்கும் ‘சைக்கிள் அன்ட் கேரேஜ்’ நிறுவனம் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

வாகனச் சோதனை தேவைகளில் ஏற்பட்ட மாற்றத்தாலும், மேம்படுத்தப்பட்ட வாகன கரிம வெளியேற்றத் திட்டத்தாலும் புதிய கார்களின் விற்பனையை ரத்து செய்வதற்கான திட்டம் முடிவுசெய்யப்பட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இரண்டுமே அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நடப்புக்கு வரும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு 2025 முதல் விற்பனையை மீண்டும் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

குறிப்புச் சொற்கள்