ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த 'டோட்டோ' அதிர்ஷ்ட குலுக்கில் 5.5 மில்லியன் வெள்ளி முதல் பரிசு, ஒரு வெள்ளி கட்டணமுள்ள ஒரேயோரு குலுக்குச் சீட்டுக்குக் கிடைத்துள்ளது.
கணினி தேர்வு செய்யும் 'குவிக்பிக்' சாதாரண குலுக்குச் சீட்டு அப்பரிசைப் பெற்றது. கேன்பெரா பிளாஸாவில் உள்ள ஃபேர்பிரைஸ் கிளையில் அது விற்கப்பட்டது.
ஒரு 'குவிக்பிக்' சாதாரண குலுக்குச் சீட்டுக்கான கட்டணம் ஒரு வெள்ளியாகும்.
டோட்டோவின் இரண்டாம் பரிசை 17 பேர் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவருக்கும் 68,374 வெள்ளி பரிசு கிடைத்தது.
இவ்வாண்டு ஜூலை 5ஆம் தேதிக்குள் குலுக்குச் சீட்டுகளைக் காட்டி பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் பரிசுத் தொகை சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியத்தின் நன்கொடையாகவும் மானியங்களாகவும் வழங்கும் தொகையில் சேர்க்கப்படும்.