பகட்டையும் பெரும்பணக்காரர்களையும் குறிவைக்கும் சீனா

பிராம்மண்டாகவும் பளிங்கு போலவும் காட்சி குளியல் அறை, உணவு அருந்தும் அறை, அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுகள், கட்டில்.

சீனாவின் செங்டு நகரில் உள்ள அந்த ஹோட்ட அறையின் அனைத்து கொகுசு வசதிகளையும் அங்குலம் அங்குலமாகப் படம்பிடித்தார் அந்த சமூக ஊடக படைப்பாளர்.

அந்த ஹோட்டலில் தங்க ஒரு நாளுக்கு $23,000 ஆனது என்று கட்டணத் தாளைக் காட்டி சிரித்தார்.

அவரது அந்த காணொளியை 28 மில்லியன் பேர் பார்த்தனர். மில்லியன் கணக்கில் விருப்பக் குறிகள் வந்தன.

ஆனால் அதுவே அவருக்கு வினையானது. சட்டம் அவரைத் துரத்தியது.

அந்த காணொளியை அகற்றிவிட்டு, சில்லறைக் கடைகளில் விற்கும் உணவுப் பொருள்களை சுவைக்கும் காணொளிகளை இப்போது பதிவிட்டு வருகிறார் அந்த படைப்பாளர்.

சீனாவில் பணத்தையும் பகட்டையும் காட்டும் இத்தகைய சமூக ஊடகக் காணொளிகளையும் பதிவுகளையும் அதிகாரிகள் முடக்கி வருகின்றனர்.

இத்தகைய உள்ளடக்கம் அந்நாட்டின் புதிய இணையச் சட்டங்களுக்குப் புறம்பானவை.

சீன இணையவாள் என்பது இந்த முடக்க நடவடிக்கையின் பெயர்.

ஆனால் பகட்டைக் காட்டுவது என்ன, பணம் இருப்பது என்ன என்பதற்கான வரையறையை சீன அதிகாரிகள், அந்தந்தச் சம்பவத்தைப் பொறுத்தே வகுத்து வருகின்றனர்.

இருப்பவர்க்கும் இல்லாதாருக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறைக்கவேண்டும் என்று அதிபர் சீ ஜின்பின் வலியுறுத்தி வருகிறார்.

அதை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் தொடர்புதொழில்நுட்ப பெருநிறுவனங்களின் மீதும் திரைப் பிரபலங்கள், நட்சத்திரங்கள் ஆகியோரின் மீதும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிலர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலாளித்துவ, மரபுடைமைக் கூறுகளை 1966 முதல் 1976 வரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிய சீனா, பின்னர் மெல்ல முதலாளித்துவ அம்சங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது.

இன்று, சீனர்களின் ஒரு விழுக்காட்டினர் அங்குள்ள சொத்தில் 31 விழுக்காட்டை வைத்திருக்கின்றனர் என்று கிரெடிட் சுவீஸ் ஆய்வு நிலையம் கூறுகிறது.

இந்த ஏற்றதாழ்வு, அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்று சீன அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!