நான்கு நாள் அதிகாரத்துவ பயணமாக அதிபர் தர்மன் மெக்சிகோ செல்கிறார்

நான்கு நாள் அதிகாரத்துவ பயணமாக அதிபர் தர்மன் மெக்சிகோ செல்கிறார்

1 mins read
43d76270-bffe-423f-bac5-e49ec84b262d
அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

அதிபர் தர்மன் சண்முகரத்னம் நான்கு நாள் அதிகாரத்துவப் பயணமாக மெக்சிகோ செல்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) முதல் புதன்கிழமை (டிசம்பர் 3) வரை அதிபர் அங்கு இருப்பார்.

லத்தீன் அமெரிக்காவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவ பயணம் இது.

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் அழைப்பின்பேரில் திரு தர்மன் அங்குச் செல்கிறார்.

சிங்கப்பூருக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான அரசதந்திர உறவின் ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதிபரின் பயணம் அமைந்துள்ளது.

அந்தக் கொண்டாட்டத்தின் தொடர்பில் மெக்சிகோ சிட்டியில் உள்ள அரும்பொருளகத்தில் கண்காட்சி ஒன்றை அதிபர் தர்மன் தொடங்கி வைப்பார்.

ஆசிய நாகரிக அரும்பொருளகமும் சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடமும் இணைந்து அதனைப் படைக்கும்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இந்த விவரங்களை சனிக்கிழமை (நவம்பர் 29) தெரிவித்தது.

மெக்சிகோ சிட்டியில் உள்ள தேசிய அரண்மனையில் அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும் என்றும் மெக்சிகோ அதிபர் திருவாட்டி ஷீன்பாம் அளிக்கும் மதிய விருந்தில் அவர் பங்கேற்பார் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அதிபர் தர்மன்மெக்சிகோபயணம்