உலகத்தர சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்

27 வயது சு. வித்­ய­பா­ரதி ஹோட்­டல் துறை வேலை­யில் சேர்ந்து மூன்று ஆண்­டு­கள்­தான் ஆகின்­றன.

ஆனால் அதற்­குள் உல­கின் ஆகச் சிறந்த வர­வேற்­பா­ளர்­களில் (Receptionist) தாமும் ஒரு­வர் என்­பதை தம்­மால் இன்­னும் நம்ப முடி­ய­வில்லை என்று அவர் தமிழ் முர­சி­டம் பெரு­மி­தத்­து­டன் கூறி­னார்.

கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்த ‘டேவிட் கேம்­பல் கோப்பை’ எனும் அனைத்­து­லக சிறந்த வர­வேற்­பா­ளர் போட்­டி­யில் இவர் இரண்­டா­வது இடத்­தைப் பிடித்து தாம் பணி­யாற்­றும் மரினா பே சேண்ட்ஸ் நட்­சத்­திர ஹோட்­ட­லுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் பெருமை தேடித் தந்­துள்­ளார்.

போட்­டி­யின் வெற்­றி­யா­ளர் பரிசு சுவிஸ் நாட்­ட­வ­ருக்­கும் மூன்­றாம் பரிசு ஜெர்­மா­னி­ய­ருக்­கும் சென்­றது.

முகப்புப் பகுதி மேலாளர்கள் மற்றும் ஹோட்டல் மேலாளர்களுக்கான அனைத்­து­ல­கச் சங்­கம் 1995ஆம் ஆண்­டி­லி­ருந்து நடத்­தும் இப்­போட்டி உலக ஹோட்­டல்களின் வர­வேற்­பா­ளர்­கள் தங்­க­ளது சேவை திறன்­களை வெளிக்­காட்­டும் தள­மாக விளங்கி வரு­கிறது.

இவ்­வாண்டு ஜெனி­வா­வில் நடந்த இப்­போட்டி கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக, இணை­யம் வழி நடத்­தப்­பட்­டது.

இந்த மூன்று மணி நேர போட்­டி­யின் இறுதிச் சுற்­றில் 12 நாடு­க­ளைச் சேர்ந்த வர­வேற்­பா­ளர்­கள் பங்­கேற்­ற­னர்.

தொலை­பேசி வழி ஹோட்­டல் முன்­ப­தி­வு­களை உறுதி செய்­வது, மிக முக்­கிய விருந்­தி­னர்­க­ளி­ட­மி­ருந்து வரும் புகார்­க­ளைச் சமா­ளிப்­பது, புதிய விருந்­தி­னர்­கள் கேட்­கும் ஹோட்­டல் அறை­யில் ஏற்­கெ­னவே வேறொ­ரு­வர் தங்­கியிருக்கும் பட்­சத்­தில் அப்படிப்பட்ட சூழ்­நி­லையை எப்­படி சமா­ளிப்­பது போன்­ற­வற்­றில் போட்­டி­யா­ளர்­கள் தங்­க­ளது திறனை வெளிக்­காட்­டி­னர்.

அதோடு, ஹோட்டலில் தங்கும் நேரத்தை குறைத்­துக்­கொண்டு அவ­ச­ர­மாக ஹோட்­ட­லிலி­ருந்து வெளி­யா­கும் விருந்தினர்களிடம் கட்­ட­ணங்­களைச் செலுத்­து­மாறு பக்­கு­வ­மாகக் கேட்­கும் முறை­யும் சோதிக்­கப்­பட்­டது.

போட்டியாளர்கள் அளித்த பதில், வெளிக்காட்டும் திறன்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.

போட்­டி­யின் முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்­ட­போது மகிழ்ச்­சி­யில் திளைத்­தார் திரு­மதி வித்­ய­பா­ரதி.

மரினா பே சேண்ட்ஸ் ஹோட்­ட­லில் நிபு­ணர்­களை நீதி­ப­தி­க­ளாக வர­வ­ழைத்து, மாதிரிப் போட்டியில் ஈடு­ப­டுத்­தி­யது தம்மைப்

போட்­டிக்கு நன்கு தயார் படுத்­தி­யது என்று வித்­ய­பா­ரதி கூறி­னார்.

“இந்த வெற்­றிக்குப் பின்­னால் குழு முயற்சி அடங்­கி­யுள்­ளது. ஏனெ­னில் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்­ட­லின் பயிற்சிக் குழு­வி­னர் இரண்டு மாதங்­க­ளாக இப்­போட்­டிக்கு என்னை தயார்­

செய்­த­னர். இத்­து­றைக்கு நான் புதிது என்­ப­தால் வெற்­றியைக் கொஞ்­ச­மும் எதிர்­பார்க்கவில்லை,” என்று தெரி­வித்­தார் வித்­ய­பா­ரதி.

போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த வித்யபாரதிக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் முன்­னணி ஹோட்­டல்­களில் தங்­கு­வ­தற்­கான பற்­றுச்­சீட்­டு­கள் கிடைத்துள்ளன.

கொவிட்-19 சூழல் மேம்­பட்­ட­தும், ஜெர்­ம­னி­யில் நடக்­கும் அடுத்­தாண்­டின் போட்­டி­யில் விருந்­தி­ன­ராகக் கலந்து­கொள்­ளும் வாய்ப்­பும் கிடைக்­கும்.

‘சிங்­கப்­பூ­ரின் சிறந்த வர­வேற்­பா­ளர்’ விருதைக் கடந்­தாண்டு வென்ற இவர், இவ்­வாண்­டின் போட்­டி­யில் நீதி­ப­தி­யாக வலம் வர­வுள்­ளார்.

கடமையே கண்ணாக, முழு ஆர்வத்துடன் தமது வேலையைச் சிறப்பாகச் செய்து, அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் இந்த இளம் சாதனையாளர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!