பிரைட் ஹில் பௌத்த மடாலயத்தில் கூரை இடிந்து விழுந்தது

பிரைட் ஹில் பௌத்த மடாலயத்தில் கூரை இடிந்து விழுந்தது

2 mins read
a8cb065c-2ea3-4bfa-a941-46229f7bd9dd
கட்டடம், கட்டுமான ஆணையம், மடாலய உரிமையாளர்களைப் பொறியியல் நிபுணர்களைப் பணியமர்த்தி, கூரை இடிந்த காரணத்தை ஆராயுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon
ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்தும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்தும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
இந்தக் கட்டடத்தில் நான்கு மாடிகள் உள்ளன. இதன் கூரை சரிந்ததில், அருகில் உள்ள அடுத்த கட்டடத்தின் சன்னல்களும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது. 
இந்தக் கட்டடத்தில் நான்கு மாடிகள் உள்ளன. இதன் கூரை சரிந்ததில், அருகில் உள்ள அடுத்த கட்டடத்தின் சன்னல்களும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரைட்ஹில் ரோட்டில் உள்ள பௌத்த மடாலயத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி புதன்கிழமை (நவம்பர் 26) இடிந்து விழுந்தது.

சம்பவம் பற்றி அன்றிரவு 8.25 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. கொங் மெங் சான் பொர் சீ என்ற பெயருடைய அந்த மடாலயத்தின் இரு கட்டடங்களும் பொதுமக்கள் வராதபடி தற்போது மூடப்பட்டுள்ளன.

கூரை ஓடுகளின் ஒரு பகுதியும் துணைக் கூரைச் சட்டத்தின் பிரிவுகளும் உடைந்து விழுந்துவிட்டதாக அறியப்படுகிறது.

குடிமைத் தற்காப்புப் படையுடன் பேரிடர், மீட்புப் பணிக்குழுவும் தேடுதல் வேட்டை நாய்களும் மடாலயத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

ஒருவர் லேசான காயம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டார்.

மடாலயத்தில் எடுக்கப்பட்ட படம், மேற்கூரை பாதிப்படைந்துள்ளதையும் பெரிய அளவிலான இடிபாடுகள் தரையில் கிடப்பதையும் காட்டியது.

மடாலயத்தில் இருக்கும் வணக்கத்திற்குரிய ஹொங் சூன் நினைவு மண்டபத்தின் கூரைப் பகுதிகளும் துணைக்கூரைச் சட்டமும் சரிந்து விழுந்ததாகக் கட்டட, கட்டுமான ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

மடாலயத்தின் இரு கட்டடங்களும் நிலையாகவே உள்ளன எனவும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்கள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.

இந்தக் கட்டடத்தில் நான்கு மாடிகள் உள்ளன. இதன் கூரை சரிந்ததில், அருகில் உள்ள அடுத்த கட்டடத்தின் சன்னல்களும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது.

மடாலய உரிமையாளர்கள் பொறியியல் நிபுணர்களைப் பணியமர்த்தி, கூரை இடிந்த காரணத்தை ஆராய்ந்து, ஆபத்தைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிரந்தர சீரமைப்புப் பணிகளைச் செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளதாக அப்பேச்சாளர் தெரிவித்தார்.

கொங் மெங் சான் பொர் சீ மடாலயத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேல்விவரங்களுக்கு தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கட்டடம்கட்டட இடிபாடுசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை