தைப்பூசத் திருவிழாவில் வெள்ளி ரத ஊர்வலம் 

தைப்பூச முந்தைய நாளான இன்று கியோங் சாய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் வெள்ளி ரதம் ஊர்வலம் மாலையில் தொடங்கியது. கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் ஆலயத்திற்கு திரண்டனர்.

கிட்டத்தட்ட 200 பக்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரத ஊர்வலத்தோடு காவடிகள் ஊர்வலமும் நடந்தது. எனினும், வழக்கத்தைவிட வெகுகுறைவாக இவ்வாண்டு 25 காவடிகள் மட்டுமே எடுக்கப்பட்டன.  

ரத ஊர்வலம் சவுத் பிரிட்ஜ் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தைக் கடந்து அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் நிறைவடைந்தது.

கொவிட்-19 கிருமித் தொற்று பரவலுக்கு பின்னர், தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு பெரியளவில் கொண்டாடப்படும் என்ற உற்சாகத்தில் பக்தர்கள் உள்ளனர். 

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!