வெளிநாட்டவருக்கு வீடு வாங்க உதவிய சிங்கப்பூரருக்கு மேலும் ஈராண்டுச் சிறை

1 mins read
f024531f-1a23-4b45-b004-06b12e814222
படம்: - பிக்சாபே

ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் மூன்று வீடுகளை வாங்க வெளிநாட்டவருக்கு உதவிய சிங்கப்பூரருக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தண்டனையுடன் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) விதிக்கப்பட்டது.

57 வயது டான் ஹுவி மெங்மீது பொய்ச் சாட்சியம் அளித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் தண்டனையை அதிகரிக்க அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதனையடுத்து அவருடைய தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சென் குவோடான் சார்பில் சிங்கப்பூரில் மூன்று வீடுகள் வாங்கிய டான்மீது குடியிருப்புச் சொத்துச் சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வீடுகளை வாங்குவதற்காக $6 மில்லியனுக்கும் அதிகமான தொகையை சென் சிங்கப்பூரரான டானிடம் வழங்கியதாகக் கூறப்பட்டது.

டான்மீது சுமத்தப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள், மூன்று வாரச் சிறைத்தண்டனையும் $3,000 அபராதமும் இவ்வாண்டு மார்ச் மாதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்