கொவிட்-19 பெருந்தொற்றின்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு குடிபெயர்ந்த சில சிங்கப்பூரர்கள்

கொவிட்-19 தொற்று தீவிரமாக இருந்தபோது அதைக் காரணமாக வைத்து வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் சிங்கப்பூரை விட்டு தங்கள் நாடுகளுக்குச் சென்றனர்.

ஆனாலும் அதே காலகட்டத்தில் சிங்கப்பூரர்களில் சிலரும் வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். இங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் தாம் வெளிநாடு சென்றதாக ஒருவர் கூறினார்.

கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்வது மூச்சுத்திணறலைப்போல் இருந்ததாக லிசா ஏ என்று மட்டும் தன்னை அடையாளம் கூறிய சிங்கப்பூரரான அந்த 37 வயது மாது கூறினார்.

அதனால் அவர் கத்தார் செல்லலாம் என்று முடிவு செய்தார். வேலைக்கு விண்ணப்பித்தார். 2021 அக்டோபரில் தோஹாவில் அவருக்கு வேலை கிடைத்தது.

“நல்ல சம்பளம், இதர நன்மைகள். அவற்றோடு தோஹாவில் வாழ்க்கைபாணி அருமையாக இருக்கும். பயணம், கலந்துறவாடல் எல்லாம் அங்கு சாத்தியம்,” என்று அவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

வளைகுடா நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டு பட்டத்தொழிலர்கள் துபாய், ரியாத், தோஹா போன்ற நகர்களை அதிகம் தேர்ந்து எடுத்துக்கொள்கிறார்கள்.

சவூதி அரேபியாவின் மக்கள்தொகை சென்ற ஆண்டில் மொத்தம் 36 மில்லியன் ஆக இருந்தது. அவர்களில் 13.49 மில்லியன் பேர் வெளிநாட்டினர் என்பது ‘குளோபல் மீடியா இன்சைட்’ என்ற ஊடகம் மூலம் தெரியவருகிறது.

ஐக்கிய அரபு சிற்றரசுகளின் மக்கள்தொகை இந்த ஆண்டில் 10.08 மில்லியன். அவர்களில் 8.92 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.

வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் என்ற அமைப்பில் ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா, கத்தார், ஓமான், குவைத், பஹ்ரேன் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகள் தொற்றுக்குப் பிறகும் அதிக வெளிநாட்டினரைக் கவர பல உத்திகளை நடைமுறைப்படுத்துகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!