16 மணி நேரத்தில் பிடிபட்ட திருடர்கள்

கடை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 500,000 வெள்ளி திருடிச் சென்ற இரண்டு வியட்னாமிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்செயல் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் பாசிர் பாஞ்சாங்கில் பழங்களை மொத்த வியாபாரம் செய்யும் ஒரு கடையில் நிகழ்ந்தது. திருடியப் பணத்தை வைத்து அடுத்த சில மணி நேரங்களில் அந்த இருவரும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பணம் திருடப்பட்ட சில மணி நேரங்களிலேயே போலிசார் அவர்களைக் கைது செய்தனர். அந்த 23 மற்றும் 35 வயது ஆடவர்கள் மரினா பே சேண்ட்சில் கைது செய்யப்பட்டனர். பணம் திருடப்பட்டதைக் கடை யின் உரிமையாளர்கள் கண்டு பிடித்துப் புகார் செய்து கிட்டத்தட்ட 16 மணி நேரத்திற்குள் அந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.

இருவரும் நேற்று முன்தினம் சுமார் 10.30 மணிக்குக் கைது செய்யப்பட்டனர். மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள ஓர் அறையில் ஏறத்தாழ 433,000 வெள்ளி ரொக்கமும் சில விலையுயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப் பட்டது.

கடைக்குள் புகுந்த திருடர்கள் பணப்பெட்டியை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றிருந்தனர் படங்கள்: சிங்கப்பூர் போலிஸ் படை

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா