டெங்கியைத் தடுக்க தொண்டர்கள் தேவை

டெங்கியைத் தடுக்க சிங்கப்பூரர்கள் பங்காற்றுவது அவசியம் என சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியிருக் கிறார். தெம்பனிஸ் வட்டாரத்தின் டெங்கி நிலவரத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார். தெம்பனிஸ் பாலிவியூ வட்டா ரத்தில் கொசு இனப்பெருக்கம் செய்யும் 86 இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு மச கோஸ் தெரிவித்தார்.

“அவற்றில் 60 இடங்கள் வீடு களிலும், 19 இடங்கள் பொது இடங்களிலும், ஆறு இடங்கள் மற்ற இடங்களிலும், ஓர் இடம் கட்டுமானத் தளத்திலும் இருந் தன,” என அவர் எழுதியிருந்தார். தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மசகோஸ், தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகளுடன் தெம்ப னிஸ் பாலிவியூ வட்டாரத்தைப் பார்வையிடச் சென்றிருந்தார். டெங்கிப் பரவலால் ஆக அதிக மானோர் பாதிக்கப்பட்ட வட்டாரம் இது. வியாழக்கிழமை வரை 195 பேர் இங்கு டெங்கியால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

டெங்கி பற்றிய துண்டுப் பிரசுரங்களை தேசிய சுற்றுப்புற வாரியம் அவ்வப்போது வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

2016-01-09 06:00:16 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

தேசிய மரபுடைமைக் கழகத்தின் நல்லிணக்க நடைப் பயணங்கள் தொடரில் நேற்று ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு வந்த வருகையாளர்களுக்கு அக்கோயிலின் அறங்காவலர் ப. சிவராமன் கோயிலின் வரலாறு பற்றியும் அங்குள்ள வழிபாட்டு நடைமுறைகளையும் விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

ஏழு வழிபாட்டு இடங்களுக்கு நல்லிணக்க நடைப் பயணங்கள்

மெக்னல்லி லசால் வளாகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், லசால் கலைக் கல்லூரியின் பீட்டர் சியா, ஸ்டீவ் டிக்சன், நீ ஆன் கொங்ஸியின் உதவி தலைவர் ரிச்சர்ட் லீ, நீ ஆன் கொங்ஸியின் தலைவர் ஜெமி டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2019

லசால் 12 மாடி கட்டடத்துக்கு $50 மி. நன்கொடை