கௌரவ மூத்த வழக்கறிஞர் நியமனம்

சிங்கப்­பூ­ரின் இரண்டா­வது கௌரவ மூத்த வழக்­க­றி­ஞ­ராக சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சட்டப் பேரா­சி­ரி­யர் இங் லோய் வீ லூன் நேற்று நிய­ம­னம் செய்­யப்­பட்­டார். சட்டத் துறையில் அவரது சிறப்பு அறிவுத்திற­னுக்­கும் சட்டத் துறை, சட்ட நிபு­ணத்­து­வம் ஆகி­ய­வற்­றின் மேம்பாட்­டிற்­காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்­கீ­க­ரிக்­கும் நோக்கில் இந்தப் பதவி வழங்­கப்பட்டிருப்­ப­தாக சிங்கப்­பூர் சட்டப் பயி­ல­கம் தனது ஊடகச் செய்­தி­யில் குறிப்­பிட்­டது. முத­லா­வது கௌரவ மூத்த வழக்­க­றி­ஞ­ராக திரு இயோ டியோங் மின் 2012ஆம் ஆண்டில் நிய­ம­னம் செய்­யப் ­பட்­டார்.

நேற்று நடை­பெற்ற சட்ட ஆண்டு தொடக்க நிகழ்ச்­சி­யில் மூத்த வழக்­க­றி­ஞர் தேர்வுக் குழுவின் அங்கத்­தி­ன­ரு­மான தலைமை நீதிபதி சுந்த­ரேஷ் மேனன் இந்த நிய­ம­னத்தை அறி­வித்­தார். சட்டத் துறையில் மிகச் சிறந்த, வழக்­க­றி­ஞர்­களை அங்­கீ­க­ரிக்­கும் பொருட்­டு­ மூத்த வழக்­க­றி­ஞர் திட்டம் 1997ஆம் ஆண்டு தொடங் கப்­பட்­டது. இதுவரை மொத்தம் 76 மூத்த வழக்­க­றி­ஞர்­கள் நிய­மிக்­கப்­ பட்­டுள்­ள­னர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பேராசிரியர் இங் லோய் வீ லூன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்
ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

09 Dec 2019

ஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்

உதவித் தொகை பெற்ற பிள்ளைகளுடன் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

1,600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி

நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து வலம்) ஸ்டெஃபன் இங், யாஸ்மின் பஷீர், புத்தகத்தைப் புனைந்த ஆலன் ஜான், புத்தகத்தில் உள்ள படங்களை வரைந்த குவேக் ஹோங் ஷின், மோகன் பொன்னிச்சாமி.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

இனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு