வசதி குறைந்த மாணவர்களுக்காக நிதி திரட்டிய மலையாளிகள் சங்கம்

சிங்கப்­பூ­ரின் SG50 கொண்டாட் டங்களை ஒட்டி கடந்த ஆண்டு சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம் வசதி குறைந்த மாண­வர்­களின் உயர்­கல்­விக்கு உத­வு­வதற்­காக $500,000 நிதி திரட்­டி­யி­ருந்தது. அந்த நிதி சிங்கப்­பூர் மலையாளி நிதி உதவி­யாக ஒதுக்­கப்­பட்டு, தேசியப் பல்­கலைக் கழகம் அதைத் தகு­தி­யுள்ள மாண­வர்­களுக்கு வழங்­கும். வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிங்கப்­பூர் அல்லது நிரந்த­ர­வா­சி­கள் இந்த நிதி உதவிக்­குத் தகுதி பெறலாம். எனினும் இந்திய மாண­வர்­களுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும்.

இந்தக் கல்வி உதவி நிதித் திரட்­டுக்கு நிதி கொடுத்து உதவி­யோ­ருக்கு நன்றி தெரி­விக்­கும் விதமாக சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம் ஆர்க்­கிட் கண்ட்ரி கிளப்­பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்­து­ப­ச­ரிப்பு நிகழ்ச்சி ஒன்­றுக்கு ஏற்பாடு செய்­தி­ருந்தது.

சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம் திரட்டிய நிதிக்கான காசோலை யைப் பெற்றுக்கொண்டார் அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் (வலமிருந்து இரண்டாவது). படம்: சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வர்த்தகர் மாநாட்டில் முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாமுடன் கைகுலுக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

‘சமூக ஒற்றுமைக்கு வர்த்தக தலைவர்கள் பங்காற்றலாம்’

நெக்ஸில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடியில் புகைமூட்டத்தை சமாளிப்பதற்குத் தேவையான பொருட்களுடன் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. படம்: த நியூ பேப்பர்

21 Sep 2019

புகைமூட்டம்; காற்றாய் பறக்கும் சாதனங்கள்

அங் மோ கியோவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியில் அங்கு வந்திருந்த வர்களைச் சந்தித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

வேலை வாய்ப்பு கண்காட்சி; 100,000 பேரை எட்ட முயற்சி