சவால்களை வெற்றிப் படிகளாக மாற்றி ஆசிரியரான நந்தா

முஹம்மது ஃபைரோஸ்

விடாமுயற்சி, மனஉறுதி, மீள் திறன். இவையே திரு நந்தா மீனாட்சி சுந்தரம் ஒரு கல்வியாளராகக் கடந்து வந்த பாதையை எடுத்துக் காட்டும் சொற்கள். யீ‌ஷூன் டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான இவர், நேற்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக உள்ளரங்கில் நடைபெற்ற ஆசிரியர்கள் பட்டமளிப்பு விழா வில் இரு விருதுகளைத் தட்டிச் சென்றார். தேசிய கல்விக் கழகத்தின் தங்கப் பதக்கம், கணிதச் சங்கப் புத்தகப் பரிசு ஆகியவை அவை. வகுப்பில் ஒட்டுமொத்த தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்ததற் காக இவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இரு பிள்ளைகளில் இளைய வரான திரு நந்தா, தம் பதின்ம வயது பருவத்தில் தந்தையை இழந்தார். அந்த பேரிழப்பினால் இவர் பெரிதும் பாதிப்படைந்து கல்வியில் கவனத்தைச் சிதற விட்டார். இருப்பினும், தாயாருடைய தன்னலமற்ற மனப்பான்மையும் பொறுப்புணர்வும் இவருக்கு வாழ்க்கையில் அர்த்தமுள்ள பாடத்தைக் கற்பித்தது. “என் தாயார் குடும்பத்தை வழிநடத்த பொறுப்பெடுத்து என் னையும் அண்ணனையும் எந்த வொரு குறையும் இல்லாமல் வளர்த்தார். அவருடைய எண் ணற்ற தியாகங்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. மனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அவர் மூலம் உணர்ந் தேன்,” என்று இவர் நெகிழ்ச் சியுடன் கூறினார்.

புத்துயிர் பெற்ற உற்சாகத்துடன் நந்தா பல சவால்களைக் கடந்து வந்தார். பல்கலைக்கழக பருவத் தில் கல்விச் செலவுகளை ஈடு செய்ய தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளை இவர் நடத்தினார். வாழ்க்கை கடினமாக இருந்த போதிலும் இவர் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

கல்வி, தொடர்பு தகவல் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரியிடமிருந்து (இடம்) சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தையும் கணித சங்கப் புத்தகப் பரிசையும் பெற்றுகொள்ளும் திரு நந்தா மீனாட்சி சுந்தரம். படம்: தேசிய கல்விக் கழகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்