காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றிய நபருக்கு சிறை

போலி விபத்துகளை ஏற்படுத்தி காப்புறுதி நிறுவனங்களை ஏமாற் றிய மோசடி நபருக்கு நேற்று 44 வாரச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. காப்புறுதி நிறுவனங்களிட மிருந்து 104,700 வெள்ளி காப் புறுதி தொகையை பெறுவதற்காக மோசடி கும்பல், போலியான சாலை விபத்துகளை ஏற்படுத்திய தாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கும்பலைச் சேர்ந்த மலேசியரான டிவ் யீ ஜெங்குக்கு நேற்று 44 வாரச் சிறைத் தண் டனையும் 5 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றுவதற்காக சதி செய்த மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்.

கவனக்குறைவாக வாகனத் தை ஓட்டி சூழ்ச்சி செய்தது, போலிசுக்கு போலியான தகவல் களை அளித்தது போன்றவை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளில் அடங்கும். திரு டிவ் தம் மீது சுமத்தப்பட்ட இதர ஏழு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதை நீதிபதி கவனத்தில் கொண்டார்.

டிவ் யீ ஜெங். கோப்புப் படம்

Loading...
Load next