தேசிய சேவையாளர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படும்

தேசிய சேவையின் 50வது பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண் டாட சிங்கப்பூர் தயாராகிக் கொண் டிருக்கும் வேளையில், தேசிய சேவையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் ஆதர வளிக்கும் வகையிலும் பற்பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், தேசிய சேவையாளர் களுக்கு அவர்களின் குடும்பங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி செலுத்தும் வகையில் குடும்பங்க ளுக்கு அன்பளிப்புகள், தேசிய சேவையாளருக்கு காப்புறுதித் திட் டங்கள் ஆகியவையும் அறிமுகப் படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரி வித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றக் கூட்டத் தொட ரின் தொடக்க நாளில் அதிபர் ஆற்றிய உரை மீதான தற்காப்பு அமைச்சின் பிற்சேர்க்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்த விவரங்களை அமைச்சர் இங் வெளியிட்டுள்ளார். “சிங்கப்பூரின் போரிடும் அணிக்கு தேசிய சேவை முது கெலும்பாக இருந்து வந்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வளப் பத்துக்கும் நமது பாதுகாப்பும் நிலைத்தன்மையும் மிகவும் அவசி யமானவை. “சிங்கப்பூரின் தற்காப்புக்கும் பாதுகாப்புக்கும் தேசிய சேவை முக்கிய அம்சமாகத் திகழ்ந்து வருவதால், தேசிய சேவையின் அனுபவத்தை மேம்படுத்த தற்காப்பு அமைச்சு குறிப்பிடத்தக்க முத லீட்டைச் செய்யும்,” என்றும் டாக்டர் இங் தெரிவித்தார்.