மாணவர்களுக்கு புதிய கலைக் கல்வி

மாணவர்களுக்கு புதிய கலைக் கல்வி தொடக்கப்பள்ளி மாணவர் களுக்கு புதிய கலைக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள கலைப் படைப்புகளை மாணவர் கள் புரிந்து கொள்ளும் நோக்கத் துடன் இந்தக் கலைக் கல்வியை தேசிய கலைகள் மன்றத்தின் பொது கலை அறக்கட்டளையும் ‘ஆர்ட் அவுட்ரீச்’ என்ற லாப நோக்கற்ற அமைப்பும் தொடங் கியிருக்கின்றன. நேற்று முன்னோட்ட கல்வி சுற்றுலாவில் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்றனர். சிங்கப்பூர் கலைஞர் உருவாக் கிய மூன்று கலைப் படைப்புகளும் சுற்றுலாப் பாதையில் இடம்பெற்று உள்ளன.

சிங்கப்பூரின் பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி சிங்கப் பூர் கலைஞர்கள் இந்தக் கலைப் படைப்புகளை உருவாக்கியிருந் தனர். இவற்றில் ‘சிங்கப்பூரில் 24 மணி நேரம்’ என்ற தலைப்பில் கலைஞர் பாயேட் இயோக் குவான் உருவாக்கிய சிங்கப் பூரின் முதல் நீண்ட ஒலி வேலைப் பாடும் அடங்கும்.

சிங்கப்பூரின் அன்றாட வாழ்க் கையைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் குடியிருப்பு வட்டாரங் களில் போக்குவரத்து, எம்ஆர்டி ரயில்களின் சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சமாகும். ஹான் சான் போர், கும் சீ கியோங், டான் வீ லிட் போன்ற கலைஞர்களின் படைப்புகளும் மாணவர் கலைக் கல்வியில் இடம்பெற்றுள்ளன. ஆர்ட் அவுட் ரிச் உருவாக்கிய புதிய பாடத் திட்டத்தின்கீழ் பல்வேறு கலைப் படைப்புகளைப் பற்றி மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

அட்மிரல்டி தொடக்கப்பள்ளி மாணவர்களில் ஒருவரான இம்மானுவெல் பாலா (இடம்), வயது 10, ஹான் சாய் போர், கும் சீ கியோங் ஆகிய இரு கலைஞர்களின் கலைப் படைப்புகளைப் பற்றி குறிப்பு எழுதுகிறார். தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலைப் படைப்புகளைப் புரிந்து கொள்வதற்காக புதிய கலைக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி