சி யுவான் சமூக மன்றத்தின் பொங்கல் விழா

பொங்கல் திருவிழா முடிந்து கிட்டத்தட்ட இரு வாரங்கள் ஆன போதும் பல சமூக மன்றங்களில் பண்டிகையின் குதூகலம் குறைய வில்லை. சி யுவான் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு அதன் பொங்கல் விழாவை நேற்று முன் தினம் கொண்டாடியது. ஹவ்காங் அவென்யூ 9ல் உள்ள அதன் புதிய சமூக மன்றத்தில் கொண்டாடப்பட்ட முதல் பொங்கல் விழா இது.

அவ்வட்டார குடியிருப் பாளர்களின் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் சிங்கப்பூரர்கள், புதிய குடியேறிகள், வெளிநாட்டுத் தம்பதியர் உட்பட ஒரு சீனத் தம்பதியரும் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர்களுக் கான பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும் நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 250 குடியிருப்பாளர்கள் கண்டு மகிழ்ந்தனர். அங் மோ கியோ=- ஹவ்காங் வட்டாரத்தைச் சேர்ந்த பல குடியிருப்பாளர்கள் பாடல்கள், நடனங்கள் என நிகழ்ச்சி படைத்து பார்வையாளர்களை மகிழ் வித்தனர்.

பொங்கல் வைத்த குடியிருப்பாளர்களின் பொங்கலை ருசித்துப் பார்க்கும் அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் (இடமிருந்து மூன்றாவது). படங்கள்: சி யுவான் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

Loading...
Load next