எரிசக்தி சேமிக்கும் திட்டம்: 2,000 குடியிருப்புகள் பங்கேற்பு

எரிசக்தி சேமிப்பையும் சமூகப் பங்களிப்பையும் ஒன்றிணைக்கும் புதுமையான திட்டத்தில் தென்மேற்கு வட்டார வாசிகள் பங்கேற்க வுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் முதல் சிங்கப்பூரின் தென் மேற்கு வட்டாரத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட குடியிருப் புகள் எரிசக்தி சேமிப்பு சவால் ஒன்றில் கலந்துகொள்ளவிருக் கின்றன. அறப்பணிக்காக தங்கள் வீட்டின் மின்சக்தி பயன்பாட்டைக் குறைக்க இந்தப் புதிய முயற்சியில் தென்மேற்கு வட்டார வாசிகள் ஈடுபடவுள்ளனர். மூன்று மாத காலத்துக்கு மின்சக்தி சேமிப்பு திட்டத்தில் பங்கேற்கும் வீடுகள் சேமிக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கும் தென் மேற்கு சமூக மேம்பாட்டு மன்றமும் சிங்கப்பூர் பவர் நிறுவனமும் ஈடுகொடுத்து நன் கொடையாக ஒரு வெள்ளியை வழங்கும்.

இந்தத் தொகை அவ்வட்டாரத் தில் உள்ள கிட்டத்தட்ட 1,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு நிதி உதவியாகப் போய்ச் சேரும். இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட $50,000 சேமிப்பை குடியிருப்பாளர்கள் எட்டலாம் என்று அதன் ஏற்பாட்டளர்கள் கணித்துள்ளனர். சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி நேற்று இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தி வைத்தார்.

Loading...
Load next