விரைவுச் சாலையில் மீண்டும் எண்ணெய் கசிவு: ஒரே வாரத்தில் 2வது சம்பவம்

சிங்கப்பூர் சாலையில் எண்ணெய் சிந்திய சம்பவம் நேற்று மீண்டும் நிகழ்ந்தது. தீவு விரைவுச் சாலை யின் ஜூரோங் டவுன் ஹால் ரோடு வெளிவழிக்கு அடுத்து நடந்த விபத்து ஒன்றைத் தொடர்ந்து லாரி ஒன்றிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக மாற்று வழிகளை நாடுமாறு வாகன மோட்டிகளை நிலப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டது. எண்ணெய் கசிந்து சாலையில் கிடப்பதால் சாங்கி நோக்கிய தீவு விரைவுச் சாலையின் இரண்டு தடங்கள் போக்குவரத்துக்கு மூடப் பட்டதாக நேற்று பிற்பகல் 3.42 மணிக்கு ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது. பின்னர் அந்தப் பகுதி சுத்தப் படுத்தப்பட்டு மாலை 6 மணிக்கு ஒரு தடமும் 7 மணிக்கு மற்றொரு தடமும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டன.

டீசல் சுமந்து வந்த வாகனம் விபத்தில் சிக்கியதாகத் தெரிகிறது. இரு தடங்கள் மூடப்பட்டதன் காரணமாக போக்குவரத்து வாக னங்கள் மெதுவாக நகர்ந்தன. சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சம்பவ இடத்தைக் கடக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதாக 24 வயது மாணவர் ஒருவர் கூறினார். விரைவுச் சாலையின் ஓரமாக எண்ணெய் லாரி நிறுத்தப்பட்டு இருந்ததாகவும் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் கசிவு நீண்டிருந்ததாகவும் ஜோலின் சியோங் என்னும் அந்த நபர் குறிப்பிட்டார்.

எண்ணெய் துடைக்கப்பட்டு புதிதாக சாலை போடப்பட்டது. படம்: சாவ்பாவ்

Loading...
Load next