உலகின் 2வது தடையற்ற பொருளியல் நாடாக தொடர்ந்து நீடிக்கும் சிங்கப்பூர்

உலகின் தடையற்ற பொருளியல் நாடுகளின் வரிசையில் இன்னமும் சிங்கப்பூர் 2வது இடத்தில் நீடிக் கிறது. 22வது ஆண்டாக அந்த இடத்தை சிங்கப்பூர் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் போட்டியாகத் திகழும் ஹாங்காங்குடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹெரிடேஜ் பவுண்டேஷன், வால் ஸ்திரீட் சஞ்சிகை ஆகியவை கூட்டாக வெளியிட்ட இவ் வாண்டின் தடையற்ற பொருளியல் நாடுகளின் குறியீட்டில் சிங்கப்பூர் 87.8 புள்ளிகளைப் பெற்றது. ஹாங்காங்குடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் 0.8 புள்ளி பின்தங்கி யுள்ளது.

கடந்த ஆண்டு இரு நகரங் களுக்கும் இடையே 0.2 புள்ளி இடைவெளி இருந்தது. சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்துள்ளது. ஆனால் உலகளாவிய வர்த்தக, முதலீடுகளை ஈர்க்கும் சிங்கப்பூர் அதற்கு வலுவான அடித்தளத்தை தொடர்ந்து வழங்குகிறது என்று அறிக்கையில் இரு அமைப்புகளும் குறிப்பிட்டன. இதற்கிடையே கடந்த ஆண்டு 12வது இடத்திலிருந்த அமெரிக்கா இவ்வாண்டு 11வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால் தடையற்ற பொருளியல் குறியீட்டில் அந்த நாடு 0.8 புள்ளி குறைந்து 75.4 புள்ளிக்கு சரிந்தது. “கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழாவது முறையாக சரிந்துள்ள அமெரிக்கா இம்முறை இதுவரை இல்லாத மோசமான அளவில் புள்ளிகளைப் பெற்றுள்ளது.