சிங்கப்பூர் உட்பட 12 நாடுகளிடையே ‘டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவம்’

வட்டார வர்த்­தக தாரா­ள­ம­ய­மாக்­கு­த­லுக்­கான முக்­கி­ய­மான மைல்­கல்­லாக ‘டிரான்ஸ்-பசி­ஃ­பிக் பங்கா­ளித்துவம்’ நேற்று கையொப் ­ப­மானது. அமெ­ரிக்கா வழி­ந­டத்­திய இந்த மிகப் பெரிய வர்த்­தக ஒப்­பந்தத்­தில் சிங்கப்­பூர் உட்பட 12 உறுப்பு நாடுகள் நியூ­சி­லாந்­தில் நேற்று கையொப்­ப­மிட்­டன. இந்தப் புதிய ஒப்­பந்தத்­திற்­கான வர்த்­தக விதி­களி­ன்படி சிங்கப்­பூர் முத­லீட்­டா­ளர்­கள், வர்த்­த­கர்­ களுக்கு கணிக்­கக்­கூ­டிய தெளி வான வட்­டா­ரச் சந்தை அமையும் என வர்த்­தக, தொழில்­துறை (வர்த்­த­கம்) அமைச்­சர் லிம் ஹங் கியாங் கூறி­யுள்­ளார்.

இந்த ஒப்­பந்தத்­திற்­காக ஆக்­லாந்து சென்­றி­ருந்த திரு லிம், இந்த பங்கா­ளித்­து­வத்­தில் இடம்­பெ­றும் நாடுகள் அனைத்­து­லக வர்த்­த­கத்­தில் 40 விழுக்­காட்டை யும் சிங்கப்­பூ­ரின் மொத்த வர்த்­த­கத்­தில் 30 விழுக்­காட்டையும் கொண்டி­ருப்­ப­தா­கக் கூறினார். “டிரான்ஸ்=பசிபிக் பங்கா­ளித்­து­வம் விரைவில் நடை­முறைப் ­படுத்­தப்­படும் என எதிர்­பார்க்­கி­றோம். அதன் வழியாக நமது வர்த்­த­கங்கள், முத­லீட்டு வாய்ப்­பு­கள் உயரும்,” என்றும் திரு லிம் சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது