சீனப் புத்தாண்டை முன்னிட்டு அதிகம் உயர்ந்த மீன்விலைகள்

சீனப் புத்­தாண்டு நெருங்கி வரும் வேளையில் சிங்கப்­பூ­ரின் பல பேரங்காடி­களில் பொருட்­களின் விலையில் கழிவு வழங்கப்­பட்­டா­லும் மீன்களின் விலை கிடு­கி­டு­வென உயர்ந்­துள்­ளது. குறிப்­பாக ‘பாம்­ஃப்­ரெட்’ மீன் வகையின் விலை இரண்டு மடங்­குக்கும் மேலாக அதி­க­ரித்து சில பகு­தி­களில் ஒரு கிலோ மீனின் விலை $100 என விற்­பனை­யா­கிறது. இருந்தாலும் கடைகளில் பொருட்கள் வாங்குவோர் கூட்டம் குறையவில்லை. சைனா டவுன் வட்­டா­ரத்­தில் உள்ள ஈரச் சந்தை­யில் இந்த வகை மீன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.